ஸ்மார்ட் கார், ஸ்மார்ட் கிளாஸ்... ஆப்பிளின் அதிரடி திட்டங்கள்!Sponsored
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்துள்ளது. கூகுள் கார் மற்றும் கூகுள் கண்ணாடி போலவே வருகிறது ஆப்பிளின் புதிய கண்டுபிடிப்புகள். ஐபோன், ஐபாட், ஐபேட் , ஆப்பிள் வாட்ச் போன்ற தனது தயாரிப்புப் பட்டியலில் புதிதாக இரண்டு தயாரிப்புகளைச் சேர்த்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தனது அடுத்த இலக்காக ரியாலிட்டி கண்ணாடிகள் மற்றும் ஆப்பிள் கார்களை தேர்வு செய்திருக்கிறது ஆப்பிள்.

Sponsored


ஆப்பிள் நிறுவனத்தின் `ரியாலிட்டி கண்ணாடி' 2020-ம் ஆண்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஆப்பிள் நிறுவனத்தின் `ஆப்பிள் கார்' 2023-ல் அறிமுகம் செய்யப்படலாம். இதைச் சொல்லியிருக்கும் KYO நிறுவனம் இதுவரை ஆப்பிள் தயாரிப்பு பற்றி சொன்னவை எல்லாம் மிகத் துல்லியமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பப் புரட்சி என்று உறுதியான பின், ஆப்பிள் தனது ஏ.ஆர். கண்ணாடிகள் (Augmented Reality Glasses) தயாரிப்பில் மும்முரம் காட்டிவருகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் கார் தயாரிப்புப் பிரிவுக்கு புராஜெக்ட் டைட்டன் என்று பெயரிட்டுள்ளதாகவும் கலிபோர்னியா சாலைகளில் ஆப்பிள் கார்களின் தன்னாட்சி சோதனை ஓட்டம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் ஆப்பிள் கார் 2023-ல் நிச்சயம் வெளிவருமென்று உறுதியாகக் கூறியுள்ளார் KYO நிறுவனத்தின் தலைவர்.

Sponsored
Trending Articles

Sponsored