DSLR போட்டோவை தங்கள் போனில் எடுத்ததாகக் காட்டி மாட்டிக்கொண்ட வாவே! #Huawei



Sponsored



தற்போதைய சூழலில், மக்களைக் கவர மொபைல் நிறுவனங்கள் அதிகம் கவனம் செலுத்துவது, அதன் கேமராவில்தான். கேமராவின் தரத்தை மையமாகக்கொண்டுதான், பாதிக்கும் மேலான ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்கள் போன்களுக்கு விளம்பரம் செய்துவருகின்றன. இதில், வாவே (Huwaei) நிறுவனமும் விதிவிலக்கல்ல. 

சமீபத்தில், தங்களது நோவா 3 என்ற ஸ்மார்ட்போனுக்கு விளம்பரம் ஒன்றைத் தயாரித்தது. ஆனால், விளம்பரத்தில் காட்டப்படும் செல்ஃபி போட்டோ, உண்மையில் அந்த போனில் எடுத்தது இல்லை என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து, வாவே நிறுவனத்தை வலை தளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர். விளம்பரத்தில் நடித்த மாடல் ஒருவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் விளம்பர படப்பிடிப்பின்போது பதிவுசெய்த போட்டோமூலம் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மக்கள்.

Sponsored


Sponsored


ஆனால் வாவே நிறுவனம், 'நங்கள் அந்த போட்டோ போனில் எடுத்ததாக எங்கும் வெளிப்படையாகப் பதிவுசெய்யவில்லை' என்று சமாளித்துவருகிறது. இப்படி டுபாக்கூர் செய்து சிக்கிக்கொண்டு சமாளிப்பது வாவே நிறுவனத்துக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே, போட்டோஷாப் மூலம் எடிட் செய்த போட்டோவை ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு முன்பே உண்டு. வாவே, சாமர்த்தியம் இல்லாமல் மாட்டிக்கொண்டது. ஆனால், இன்னும் எத்தனை நிறுவனங்கள் சிக்காமல்  இப்படிச் செய்துவருகின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.



Trending Articles

Sponsored