`குறைதீர்க்கும் அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை’ - வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்விSponsoredவாட்ஸ்அப் நிறுவனம் ஏன் இதுவரையில் அந்நிறுவனத்துக்கான குறைகளைக் கேட்டறியும் அதிகாரியை நியமிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எதிராகத் தொண்டுநிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், 'ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்குதற்கு, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி சில விவரங்களை அளிக்க வேண்டியுள்ளது. பணப் பரிவர்த்தனை சேவையை மேற்கொள்வதற்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இந்தியாவில் அலுவலகம் இருக்க வேண்டும். ஆனால், வெளிநாட்டு நிறுவனமான வாட்ஸ்அப்க்கு இந்தியாவில் அலுவலகங்களே இல்லை.

Sponsored


மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்தியாவிலுள்ள பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கென்று குறைதீர்க்கும் அதிகாரி இருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரிகளை நியமிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த  நீதிபதிகள் இதுதொடர்பாக, 'வாட்ஸ்அப் நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்துறை, நிதித்துறை ஆறு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்கவேண்டும்' என்று உத்தரவிட்டார். 

Sponsored
Trending Articles

Sponsored