”வோடபோன் அவுட்... அடுத்த டார்கெட் ஏர்டெல்!” - ஜியோவின் புராகிரஸ் ரிப்போர்ட்



அறிமுகப்படுத்தப்பட்ட நாளிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் தொலைத்தொடர்பு நிறுவனம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. ஜியோவின் அபார வளர்ச்சியைப் பார்த்த மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவை விலையில் மாற்றங்கள் கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வருவாயில் வோடஃபோனை பின்னுக்குத் தள்ளி, தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஜியோ. இது, ட்ராய் (TRAI) வெளியிட்ட Revenue Market Share (RMS) பற்றிய தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

Sponsored


ஜூன் காலாண்டிற்குப் பின், இந்த RMS என்கிற மொத்த வருவாய்ப் பங்கில் முந்தைய நிலவரத்தைவிட 253 புள்ளிகள் அதிகரித்து, 22.4 சதவிகிதத்தைப் பெற்றுள்ளது ஜியோ. மற்ற நிறுவனங்களின் RMS பங்குகள் கணிசமான அளவு குறைந்துள்ளன. இந்தப் பங்கில் வோடஃபோன் 175 புள்ளிகளை இழந்து 19.3 சதவிகிதமும், ஐடியா நிறுவனம் 106 புள்ளிகளை இழந்து 15.4  சதவிகிதமும் பெற்றுள்ளன. 12 புள்ளிகளை இழந்தபோதிலும் 31.7 சதவிகித பங்குகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது, பாரதி ஏர்டெல் நிறுவனம்.

Sponsored


கடந்த காலாண்டில், ஜியோ சுமார் 7200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் 6,200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள வோடஃபோனை பின்னுக்குத்தள்ளி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது ஜியோ. 10,200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி முதல் இடத்தில் உள்ளது, ஏர்டெல். 

Sponsored


ஜியோவின் அதிரடி விலைக்குறைப்பு மற்றும் இலவச வாய்ஸ் காலிங் வசதியும்தான் இதற்கு வித்திட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்த இரண்டாவது இடத்தை ஜியோ நீண்ட நாள்கள் தக்கவைக்க முடியாது. வோடஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் ஒன்றிணைய உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வந்திருந்தன. கூடிய விரைவில் இது நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தப் புதிய கூட்டணி ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடிக்கும். மீண்டும் ஜியோ மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படும். 



Trending Articles

Sponsored