வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வீடியோவை டவுன்லோடு செய்ய முடியுமா... எப்படி?



Sponsored



வாட்ஸ்அப் வெறும் சாட் செய்யும் செயலியாக இருந்த காலம் எல்லாம் மாறிப்போய்விட்டது. அலுவலக விஷயங்கள் விவாதிப்பது தொடங்கி முக்கிய டாக்குமென்ட்கள் அனுப்புவது, வீடியோ காலிங் வரை அனைத்தும் இப்போது வாட்ஸ்அப்பில்தான். இதற்கு அவர்கள் அளிக்கும் `end to end encryption' என்ற பாதுகாப்பும் ஒரு முக்கியக் காரணம். இதனுடன், கூடிய விரைவில் வாட்ஸ்அப் மூலம் பணமாற்றும் வசதியும்கூட அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் நம் மக்கள் வாட்ஸ்அப்பில் அன்றாடம் தங்களது ஸ்டேடஸ்களைப் பதிவு செய்வது வழக்கம். தனிப்பட்ட விஷயங்கள், நிகழ்வுகள் மட்டுமன்றி சமூக கருத்துகள், பொழுதுபோக்கு வீடியோக்கள் எனப் பலவிதமாக ஸ்டேடஸ் பகிரப்படுகின்றன. 

பெரும்பாலான நேரத்தில் ஒருவர் வைக்கும் இந்த ஸ்டேடஸ் வீடியோ பிடித்துப்போய் அதை தாங்களும் ஸ்டேடஸாகப் பகிரவேண்டும் என்று சிலர் விரும்புவர். ஆனால், வெளிப்படையாகப் பதிவிறக்கம் செய்ய ஸ்டேடஸ் டவுன்லோடு ஆப்ஷன்கள் எதுவும் வாட்ஸ்அப் தருவதில்லை. போட்டோ என்றால் கூட ஸ்டேடஸை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துவிடலாம். அதுவே வீடியோவாக இருந்தால் ஸ்டேடஸ் வைத்தவரிடம் கேட்டு வாங்கி அதன் பின் பகிர்வதுதான் வழக்கம். ஆனால், இப்படி அவரிடம் கேட்டுத்தான் ஸ்டேடஸ் வீடியோவை வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கேட்காமலேயே அந்த வீடியோவை எளிதாக டவுன்லோடு செய்ய முடியும். அது எப்படி என்பதைத் தெளிவாகப் பார்ப்போம்.

இந்த வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களை பதிவிட்டதிலிருந்து 24 மணிநேரத்துக்குள்தான் ஒருவரால் பார்க்கமுடியும். அதனால் பழைய ஸ்டேடஸ்களை எல்லாம் டவுன்லோடு செய்யமுடியுமா என்று வில்லங்கமாகக் கேட்கக் கூடாது. இப்போது என்ன செய்வதென்று படிப்படியாகப் பார்ப்போம்.

Sponsored


1. முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ளவும். அதில் டவுன்லோடு செய்ய வேண்டிய ஸ்டேடஸ் வீடியோவை ஓப்பன் செய்து முழுதாகப் பார்த்துவிடவும். அப்போது தான் முழுசாக உங்கள் போனுக்கு வீடியோ வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியும் இல்லையென்றால் இந்த முறை செயல்படாது.

Sponsored


2. பின்பு ஏதேனும் ஃபைல் மேனேஜர் செயலியை ஓப்பன் செய்யவும். (Hidden Files பார்க்கும் வசதி இருக்கவேண்டும்), உதாரணத்துக்கு இங்கே ES File Explorer என்ற பிரபல செயலியை எடுத்துக்கொள்வோம்.

3. அதை ஓப்பன் செய்துவிட்டு செயலியின் செட்டிங்ஸை ஓபன் செய்யவும். அதில் Display Settings என்ற பிரிவின் கீழ் `Show Hidden Files' என்ற ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செய்துவிட்டு பின் மீண்டும் செயலியை ஓபன் செய்யவும். இதன் மூலம் மறைந்திருக்கும் ஃபோல்டர் மற்றும் ஃபைல்களைக் காணமுடியும்.

4. பின் Internal Storage > WhatsApp > Media என்ற வரிசையில் உள்சென்று 'Media' என்ற ஃபோல்டரை அடையவும். அதில் statuses என்ற ஃபோல்டர் இருக்கும். இது தென்படவில்லை என்றால் முன்பு கூறிய `Show Hidden Files' ஆப்ஷன் சரியாக செட் செய்யவில்லை என்று அர்த்தம்.

5. statuses ஃபோல்டரில் நீங்கள் பார்த்த ஸ்டேடஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கும். இதில் எது தேவையோ அதை காப்பி (copy) செய்து வேறு ஏதேனும் ஒரு ஃபோல்டரில் பேஸ்ட் (Paste) செய்யவும். 

அவ்வளவுதான். இனி பேஸ்ட் செய்த அந்த ஃபோல்டரிலிருந்து இதை ஸ்டேடஸாகப் பகிர முடியும். 24 மணிநேரத்துக்குப் பிறகு இது மறைந்தும் போகாது. எப்போது வேண்டுமென்றாலும் இதைக் காணவும் முடியும். 

இந்த முறையின் மூலம் ஸ்டேடஸை டவுன்லோடு செய்துப் பகிரலாம் என்ற போதிலும் இதில் இருக்கும் ஆபத்தையும் கவனிக்காமல் இருந்துவிட முடியாது. ஸ்டேடஸ் வீடியோக்களை வாட்ஸ்அப் டவுன்லோடு செய்ய அனுமதிப்பதில்லை. அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நம்பி சிலர் தனிப்பட்ட விஷயங்களை ஸ்டேடஸாகப் பகிர்ந்து வருவர். அவர்கள் ``ஸ்டேடஸ் அப்படியில்லை” என்பதை உணர்ந்து இனி உஷாராக இருக்கவும். எப்படியும் யார் யாரெல்லாம் ஸ்டேடஸ் பார்க்கலாம், பார்க்கக் கூடாது என்பதை நீங்கள் வாட்ஸ்அப்பில் செட் செய்யமுடியும் என்பதால் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. 



Trending Articles

Sponsored