3,000 ரூபாய் விலையில் ஜியோ அறிமுகப்படுத்தும் மொபைல்போனின் அம்சங்கள் - முழு விவரம்Sponsoredஜியோ நிறுவனம் அதன் முதல் போனைத் தொடர்ந்து தற்போது அதனது 2-வது மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன், முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இந்த போனானது இன்று மதியம் 12 மணிக்கு ஜியோ இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

விலை 2,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மாடலும் சென்ற மாடலைப் போலவே ஜியோ சிம் கார்டில் மட்டுமே இயங்கும். இந்த மொபைல்களுக்கென்றே 49, 99, 153 போன்ற தொகைகளில் பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. பழைய நோக்கியா ஆஷா போன் போல் தோன்றமளிக்கும் இது கடந்த மாடலைப் போலவே KaiOS என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், a-z வரை பட்டன்களைக் கொண்ட கிவெர்ட்டி (QWERTY) கி-பேட் தான் இந்த மாடலின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Sponsored


மேலும் டூயல் சிம், 2.4 அங்குல QWCA திரை, 2,000 mAh பேட்டரி, 512 MB RAM, 4GB ஸ்டோரேஜ், 2MP பின் கேமரா மற்றும் VGA முன் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஜியோ போன் 2. இதைத் தவிர 24 இந்திய மொழிகளில் இயங்கும் திறன் இந்த போனுக்கு உண்டு. பட்ஜெட்டில் சாதாரண போனாகவும், அதே சமயம் இன்றைய தொழில்நுட்பங்களைப்  பயன்படுத்தவும் கூடிய ஒரு போன் வேண்டுமென்று விரும்பினால் 12 மணிக்கு ஜியோ தளத்தில் இந்த மாடலை வாங்கிக் கொள்ளலாம். 

Sponsored
Trending Articles

Sponsored