அன்-இன்ஸ்டால் செய்யாமல் வாட்ஸ்அப்பிலிருந்து கொஞ்ச காலம் தலைமறைவாவது எப்படி?சமூகவலைத்தளங்கள் நல்ல டைம்பாஸ் என்றாலும், அவ்வப்போது அதில் ஒரு சலிப்பு ஏற்பட்டு சிறிது காலம் தனிமையை உணரவேண்டும் என்று சிலபேர் விரும்புவார்கள். இதற்காக பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இருந்து விலகித் தலைமறைவாக இருக்க நமது அக்கவுன்ட்டை மட்டும் லாக் அவுட் செய்தாலே போதுமானது. ஆனால் இந்த வாட்ஸ்அப் குரூப்கள், வெட்டி ஃபார்வேர்ட்களிலிருந்து தப்பித்து ஒதுங்கியிருப்பது அந்த அளவு எளிதல்ல. ஒன்று மொத்தமாக வாட்ஸ்அப்பை அன்-இன்ஸ்டால் செய்யலாம், இல்லையென்றால் மொபைல் டேட்டாவை ஆன் செய்யாமலேயே சிலகாலம் இருக்கலாம். ஆனால் திரும்ப வாட்ஸ்அப் வரவேண்டுமென்றால் செயலியை இன்ஸ்டால் செய்து, அதன்பின் நம் நம்பரை வெரிஃபை செய்து, பழைய மெசேஜ்கள் கொண்ட பேக்-அப்களை லிங்க் செய்ய வேண்டும். ஒருமுறை என்றால் பரவாயில்லை அடிக்கடி எஸ்கேப் ஆகவேண்டும் என்றால் இந்த முறை ஒத்துவராது. அதே போல மொபைல் டேட்டா இல்லாமலேயே இருப்பதும் சாத்தியம் கிடையாது.

Sponsored


இதற்கு முதல் தீர்வு Mobiwol,NoRoot போன்ற ஃபயர்வால் செயலிகள். இதன் மூலம் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் இன்டர்நெட்சேவை வராதவாறு கட்டுப்படுத்துவது. ஆனால், இப்படி புதிய செயலிகள் எதுவும் இல்லாமலே எளிதாக செட்டிங்ஸில் சிலவற்றை மாற்றி வாட்ஸ்அப்பில் இருந்து ஒதுங்கி நம்மால் இருக்க முடியும். இதற்கு முதலில் வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷன்களிலிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு வாட்ஸ்அப் செயலியின் செட்டிங்ஸிற்கு சென்று Notification என்ற பிரிவினுள் செல்லவும். அதில் 'Ringtone' பிரிவில் None என்பதை செலக்ட் செய்யவும். இதன்மூலம் இனி நோட்டிஃபிகேஷன்களிற்கு சத்தம் எதுவும் வராமல் தடுக்க முடியும்.

Sponsored


Sponsored


Lights பிரிவில் சென்று நோட்டிஃபிகேஷன் லைட்டையும் ஆஃப்செய்யலாம். ஆனால் இதன்மூலம் நோட்டிபிகேஷன் சத்தத்தில் இருந்து தப்பிக்கலாம் அவ்வளவே. மொத்தமாக நோட்டிஃபிகேஷன் எதுவுமே வராமல் இருக்க உங்கள் மொபைலின் ஆண்ட்ராய்டு செட்டிங்ஸை ஓபன்செய்யவும். அதில் 'Apps'பிரிவினுள் சென்று வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்யவும். அதில் Notification என்ற பிரிவினுள் Block all என்றிருக்கும் பட்டனை ஆன் செய்யவும். இதன் மூலம் நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வாட்ஸ்அப்பிலிருந்துஉங்கள் பார்வைக்கு வராது. 

ஆனாலும் பின்னணியில் உங்கள் வாட்ஸ்அப்பிற்கு மெசேஜ்கள் வந்துகொண்டே தானிருக்கும். நீங்கள் மெசேஜைப் பெற்றுவிட்டதாக டபுள் டிக்கும் அனுப்பியவருக்குக் காட்டும். இதுவும் இருக்கக்கூடாது என்று நினைத்தால் அதே 'Apps' பிரிவினுள் சென்று வாட்ஸ்அப் செயலியை தேர்வு செய்து 'Force Stop' என்ற பட்டனை கிளிக் செய்யவும். இது செயலி செயல்பாட்டை நிறுத்திவிடும். மேலும் 'Data Usage' பிரிவினுள் சென்று 'background data' என்ற ஆப்சனை ஆஃப் செய்யவும். இதன்மூலம் நீங்களாகச் சென்று வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால் மட்டுமே மெசேஜ்கள் உங்களை வந்தடையும். இதைத்தவிர கை தவறி செயலியை ஓபன் செய்யாமல் இருக்க ஹோம் ஸ்க்ரீனிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்கி விடலாம். 

இதைச் செய்வதால் எப்போது வாட்ஸ்அப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது செயலியை ஓபன் செய்து பார்த்துவிட்டு, மீண்டும் செட்டிங்ஸ் சென்று செயலியை 'ForceStop' செய்து கொள்ளலாம். இந்த அளவுக்கு இறங்கி வாட்ஸ்அப்பை புறக்கணிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும். ஆனாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்றைக்காவது தேவை வரும்போது உதவக்கூடும்.Trending Articles

Sponsored