வாடிக்கையாளர்களை கவர ஒன் ப்ளஸ் மொபைல் நிறுவனம் புதிய யுக்தி!Sponsoredமொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வசதிகள் தொடங்கி விலை வரை போட்டியாளரைச் சமாளிக்க பல வழிகளை மொபைல் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தப் போட்டியின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது ஒன் ப்ளஸ். 

மின்னணு சாதனங்களைப் பொறுத்தவரை வாங்கியவுடன் அதன் தயாரிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு முடிவதில்லை. ஏதேனும் பிரச்னை என்றால் சர்வீஸ் சென்டருக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அங்கே வாடிக்கையாளரைச் சரியாக நடத்தாமல் போனால், பொருள் எவ்வளவு விலை குறைவாக இருந்தாலும் அதன் மதிப்பு காணாமல் போய்விடும். இந்த விஷயத்தில் இந்தியாவில் ஒன் ப்ளஸுக்குச் சறுக்கல் என்றுதான் சொல்ல வேண்டும். அதைச் சரிக்கட்ட இப்போது காபியை கையிலெடுத்திருக்கிறது ஒன் ப்ளஸ்.

Sponsored


தன் சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தரமான காபியைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். இந்தியாவின் முக்கியமான காபி இடங்களிலிருந்து சிறப்பான காபியை இதற்காக வாங்கியிருக்கிறார்கள். கூடவே, ஒரு மணி நேரத்துக்கு அதிவேக இணையத்தையும் இலவசமாக வழங்கப்படும் என்கிறது ஒன் ப்ளஸ். 

Sponsored


அது என்ன ஒரு மணி நேரம் ``அதற்குள்ளாக உங்கள் மொபைல் சரி செய்து தரப்பட்டும்" என்கிறது ஒன் ப்ளஸ். 

ஹைன் என்ட் மாடலில் ஒன் ப்ளஸ் ஒரு நல்ல தேர்வு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சேவை மையத்தின் தரத்தையும் உயர்த்திவிட்டால் கணிசமான வாடிக்கையாளர்கள் கூடுவார்கள். ஆனால், ஒரு காபிக்காக சேருவார்களா என்பது சந்தேகம்தான். Trending Articles

Sponsored