பாஸ்...உங்க மீம்ஸ் இனி ஃபேஸ்புக்குக்கும் புரியும் Sponsoredஅன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகிவிட்ட சமூகவலைதளங்களில் முக்கியமாகப் பகிரப்படுபவை மீம்ஸ்தாம். சில நேரங்களில் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஒருவரைத் தாக்கும் விதமாகவும், தேவையில்லாத வெறுப்புஉணர்வைப் பகிரும் விதமாக இருக்கும். இதைக் குறைக்க நினைத்த ஃபேஸ்புக் செயற்கை நுண்ணறிவு ( AI ) தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளது. இதன் மூலம் மீம்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கண்டறிந்து தகாத மீம்களை களையெடுக்கவுள்ளது ஃபேஸ்புக்.

ரோஸெட்டா ( Rosetta ) என்ற AI தினமும் பதியப்படும் கோடிக்கணக்கான படங்களில் இருக்கும் வார்த்தைகளை எடுத்துத்தர உள்ளது. இந்த ரோஸெட்டா AI பல்வகைப்பட்ட மொழிகளைக் கண்டறியவல்லது. இதன்பின் படங்களிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளை டௌன்ஸ்ட்ரீம் க்ளசிஃபையர்ஸ் மூலம் பிரித்து தகாத பதவிகளை நீக்கத் திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக்.

Sponsored


``படங்களுடன் அதனில் இருக்கும் வார்த்தைகளையும் சேர்த்து அது என்ன சொல்லவருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்காது. ஆனால், இதன் மூலம் தவறான, தீங்குவிளைக்கும் படங்களை நீக்கி மக்கள் பயன்படுத்த ஓர் ஆரோக்கியமான இடமாக ஃபேஸ்புக்கை பாதுகாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளது ஃபேஸ்புக்.

Sponsored


மேலும் இப்படி வார்த்தைகளை படங்களிலிருந்து எடுப்பதன் மூலம் அந்த வார்த்தைகளைக் கொண்டே படத்தைத் தேட முடியும். இது இமேஜ் சர்ச் வசதியை மேலும் மேம்படுத்தும். ஒரு நபர் விரும்பத்திற்கேற்ப படங்களை அவரது நியூஸ் ஃபீட்டில் காட்டமுடியும். இதை முடிந்தளவு எந்தெந்த மொழிகளில் செய்யமுடியுமோ அவை அனைத்திலும் கொண்டுவர முயல்கிறது ஃபேஸ்புக்.
 Trending Articles

Sponsored