ஃபேஸ்புக்கில் இனி 'குரூப் வீடியோ கால்' !Sponsoredஃபேஸ்புக், புதிதாக 'குரூப் வீடியோ கால்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஒரே குரூப்பில் உள்ள 50 நபர்கள் வரை ஒரே நேரத்தில் பேசிக்கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியில் ஆறு பேர் வரை வீடியோ கால் மூலமாகத் தெளிவாகப் பார்த்துப் பேசமுடியும். இந்த எண்ணிக்கை அதிகமாகும் போது, பேசுபவரின் வீடியோ பெரிய வடிவிலும் மற்றவர்களின் வீடியோக்கள் சிறிய வடிவத்திலும் திரையில் தெரியத் தொடங்கும். எனினும் வீடியோ தெரியாவிட்டாலும், 50 பேர் வரை வாய்ஸ் மூலமாகவும், சாட் மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும்.

புதிதாக ஒரு குரூப் ஆரம்பித்தோ அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு குரூப்பில் இருந்தோ வீடியோ கால் செய்யமுடியும். குரூப்பில் இருக்கும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்தும் பேச முடியும். தங்களுக்கு வரும் அழைப்புகளில் விருப்பப்பட்டால் இணைந்துகொள்ளவும், விருப்பமில்லாவிட்டால் துண்டித்துக் கொள்ளவும் வசதி இருக்கிறது.

Sponsored


இந்தப் புதிய வசதி முதல்கட்டமாக டெஸ்க்டாப் வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைலில் ஃபேஸ்புக் அப்டேட் செய்வதன் மூலம், இந்தப் புதிய வசதியைப் பெற முடியும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விதமான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும்  ஃபேஸ்புக் செயலியில் இந்த வசதியை ஏற்படுத்த 'ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. பயனர்களைக் கவரும்விதமாக, ஃபேஸ்புக் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored