'மேட் இன்' இந்தியா ஆகிறதா ஆப்பிள்?ஆப்பிள் நிறுவனம் தனது கேட்ஜெட்ஸ்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையில், மத்திய அரசுடன் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, ஆப்பிள் ஸ்டோர்ஸ்களும் திறக்கப்பட உள்ளது. பெரிய மார்க்கெட்டான இந்தியாவில் ஐஃபோன் உள்ளிட்ட ஆப்பிள் கேட்ஜெட்ஸ்களின் விற்பனையை அதிகரிக்க இந்த முடிவாம். தற்போதுள்ள சூழ்நிலையில் 2017-ஆம் ஆண்டில் உலகில் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்துக்கு இந்தியா செல்லும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன. மேலும், தற்போது இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையை விட, ஐ-ஃபோன் விற்பனை 2 சதவீதம் குறைவாக உள்ளது.

Sponsored


இதையெல்லாம் மனதில் வைத்துதான் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored