இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள்பிரபல சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம், புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஸ்னாப்சாட்டில் உள்ளது போல இனி இன்ஸ்டாகிராமிலும் புகைப்படம் மற்றும் வீடியோவில், ஸ்டிக்கர் மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்த முடியும். புதிய அப்டேட்டில், காலநிலை, இடங்களைக் குறிப்பிடும் ஸ்டிக்கர்களை இன்ஸ்டாகிராம் இணைத்துள்ளது. இந்த ஸ்டிக்கர்களை, புகைப்படம் அல்லது வீடியோவில் விருப்பப்படும் இடத்திற்கு நகர்த்திக்கொள்ள முடியும். எழுத்துக்களையும் இதுபோன்று திருப்பிக்கொள்ளவும், நகர்த்திக் கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் வசதி.

Sponsored


இதே போல், 'ஹேண்ட்ஸ் ஃப்ரீ' (Hands Free) மோடில் வீடியோவை ரெக்கார்ட் செய்து, உடனடியாக போஸ்ட் செய்ய முடியும். இதற்கு முன்னர் ரெக்கார்ட் செய்யும்போது பட்டனை அழுத்திப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த 'ஹேண்ட்ஸ் ஃப்ரீ' மோடில், அது தேவையில்லை. பட்டனை ஒருமுறை அழுத்திவிட்டால் போதுமானது. அதன்பின் தேவையான நேரம்வரை ரெக்கார்ட் செய்துவிட்டு மீண்டும் பட்டனை அழுத்தினால் போதும். வீடியோ தயார். இன்னும் சில தினங்களில் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து, இந்தப் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored