கூகுள் மீது அந்நிறுவன ஊழியர் வழக்கு!Sponsoredகூகுள் நிறுவனத்தின் மீது, அதில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கலிஃபோர்னியா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்நிறுவனத்தின் உள் ரகசியக் கொள்கைகள், கலிஃபோர்னிய தொழிலாளர் சட்டத்துக்குப் புறம்பாக உள்ளதாக, ஜான் டோ என்ற அந்த ஊழியர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 12 விதிமீறல்களில் கூகுள் ஈடுபட்டிருப்பதாக வழக்கு பதிவாகியுள்ளது. 

‘முன் அனுமதி பெறாமல் சிலிக்கான் வேலியில் உள்ள டெக் நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற கதையமைப்பு கொண்ட நாவல்களை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் எழுதக்கூடாது' மற்றும் ‘அந்நிறுவனம் குறித்த தகவல்களை எந்த ஊழியராவது வெளியே கசியவிடுவதாக சந்தேகித்தால், அதையும் அங்குவேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவிக்கவேண்டும்’ உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை, கூகுள் தனது ஊழியர்களுக்கு விதித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அந்நாட்டின் தொழிலாளர் சட்டத்துக்குப் புறம்பானது.

Sponsored


இந்த வழக்கில் ஜான் டோ வெற்றி பெறும் பட்சத்தில், கூகுள் அதிகபட்சமாக 3.8 பில்லியன் டாலர் வரை அபராதமாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored