சுந்தர்பிச்சையும், மார்க் ஸக்கர்பெர்க்கும் எதற்கு அழுதார்கள்? அத்தியாயம் 1 #2016TechRecapSponsoredஒவ்வொரு வருஷமும் பல டெக்னாலஜிகள் அறிமுகம் ஆகும், பல கேட்ஜெட்டுகள் மார்க்கெட்ட ஆக்கிரமிக்கும் சில வைரல் ஹிட்டாகும், சில சொதப்பல் ஹிட்டாகும். அப்படி ஒரு வருடத்தில் நடந்த டெக் நிகழ்வுகளில் ஒவ்வோரு மாதமும் நடந்த சுவரஸ்யமான உலகை கவனிக்க வைத்த டெக் வைரல்கள்  #2016TechRecap ஒரு தொகுப்பாக... 

நீங்கள் வியந்த டெக் வைரல்களை அது நடந்த மாதத்துடன் கமென்டில் தெரியபடுத்துங்கள்....2016ம் ஆண்டின் முதல் நான்கு மாத டெக் நிகழ்வுகள் #2016TechRecap இதோ...


ஜனவரி  #2016TechRecap

Sponsored


Sponsored


 வந்தாச்சு ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்!

அமெரிக்காவில் அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் நேரலை (லைவ் ஸ்ட்ரீமிங்) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் . இனி நாம் நேரலையாகவே வீடியோவை பகிர முடியும். உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் நேரலை வசதியை கொண்டு வந்தது  ஃபேஸ்புக்.

 கூகுள்.காம் வாங்கிய நபருக்கு கூகுள் கொடுத்த தொகை

12 டாலருக்கு கூகுள்.காம் தளத்தை ஏதேச்சையாக வாங்கிய சன்மய் வேத்-ஐ நினைவிருக்கிறதா? அவருக்கு கூகுள் 6,006.13 டாலர் சன்மானம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. 'Google' வார்த்தை எண்களில் வர்ணித்தால்' 6,006.13' வரும். சன்மய் இதை நன்கொடை செய்ததைக் கேள்விப்பட்டு டபுள் தொகை கொடுத்ததாம் கூகுள்!

விலையில்லா வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப் அப்ளிகேசனை முதல் ஆண்டில் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு வருடத்திற்கு பின் இந்தியாவில் ஆண்டிற்கு ரூ.54 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கட்டணமும் ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனர் ஜேன் கௌம் தெரிவித்துள்ளார்.


பிப்ரவரி  #2016TechRecap

500 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்!

உலகிலேயே மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்று கூறப்படும் ப்ரீடம் 251 வெளியிடப்பட்டது. இந்திய அரசின் அங்கீகாரத்துடன் ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள இந்த போனின் விலை 500 ரூபாய்தான். இதன் மூலம் அனைவரையும் தொடர்பில் இணைக்க முடியும் என்பதை இலக்காக கொண்டு துவங்கப்பட்டது.

இந்த ஆண்டின் மகத்தான கண்டுபிடிப்பு இதுதான்

100 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்புகளிலே மகத்தான கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. 'லிகோ டிடெக்டர்' மூலம் புவி ஈர்ப்பு அலைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


மார்ச்  #2016TechRecap

ஆசியாவிலேயே பெரிய டெலஸ்கோப் இந்தியாவில்

பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா - பெல்ஜியம் இணைந்து உருவாக்கியுள்ள ARIES டெலஸ்கோப்பை திறந்து வைத்தார். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே பெரிய டெலஸ்கோப். இதன் பிரைமரி லென்ஸ் 3.6 மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆர்யபட்டா வானியல் ஆராய்ச்சி மையம் இதை இயக்குகிறது.

இதைக்கூடவா ட்ரெண்ட் ஆக்குவீங்க?

​​இன்ஸ்டாகிராமில் உருவாக்கப்பட்ட ஒரு ஹேஷ் டேக் செம வைரலாகியது. #puppybelly என்பதுதான் அந்த ஹேஷ் டேக். அட ரொம்ப யோசிக்காதீங்க. நாய்க்குட்டியோட தொப்பைகளை படம் பிடித்து பதிவேற்ற வேண்டும். சும்மா இருப்பாங்களா நம்மாட்கள்? வித விதமான போட்டோக்களை பதிவேற்ற களைகட்டியுள்ளது இன்ஸ்டாகிராம். பதிவேற்றப்பட்டதில் மில்லியன் ஹிட் போட்டோக்கள் அதிகம். 


ஏப்ரல்  #2016TechRecap

'எல் நினோ'வின் தங்கை 'லா நினா' வருகிறது

கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' வெப்ப சலனத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெப்பத்தில் தகித்தது. 'எல் நினோ'வின் தாக்கம் இந்த ஆண்டு குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சுந்தர்பிச்சையும் மார்க்கும் ஏன் அழுதார்கள் தெரியுமா?

அமெரிக்காவின் சிலிகான் வேலியில் முக்கிய சி.இ.ஓக்கள் முன்னிலையில் கணித மேதை ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ராமானுஜத்தின் வாழ்க்கையை பார்த்து சுந்தர் பிச்சையும், மார்க் ஸக்கர்பெர்க்கும் கண்ணீர் வடித்துள்ளனர். மேலும் ராமானுஜத்தின் பெயரில் அமைப்பு ஒன்றை இணைந்து உருவாக்கவும் சபதம் எடுத்துக் கொண்டனர்.

அனிருத்தை பாராட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒவ்வொரு வருடமும்  இளம் விஞ்ஞானிகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகளை கண்காட்சியாக வெள்ளை மாளிகையில் நடத்தி வருகிறார். இந்த ஆண்டு மின்சாரம் இல்லாமல் மருந்துகளை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதனப் பெட்டியை கண்டுபிடித்த இந்திய மாணவர் அனிருத் கணேசனை ஒபாமா மிகவும் பாராட்டினார். 

மே முதல்  ஆகஸ்ட் வரையிலான டெக் நிகழ்வுகள் நாளை.....

- ஞா.சுதாகர்Trending Articles

Sponsored