வெளியுறவுத் துறை தொடங்கிய 'ட்விட்டர் சேவா'Sponsoredஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் புதிதாக 'ட்விட்டர் சேவா' என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது. இனி ட்விட்டர் மூலம், வெளியுறவுத்துறை மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களும், குறைகளும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என இந்த சேவையைத் தொடங்கி வைத்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாகத் தீர்க்கப்படும். இச்சேவையின் கீழ் 29 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களும் இணைக்கப்படுவதால், பாஸ்போர்ட் தொடர்பான புகார்களும் நிவர்த்தி செய்யப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. விரைவில் இதுபோன்ற சேவை சுகாதாரத்துறை மற்றும் உள்துறைக்கும் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored