மூன்று புது மாடல்கள்: எகிறி அடிக்கும் சாம்சங்கடந்த சில மாதங்களாக டல்லடிக்கும் தங்கள் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த கேலக்ஸி A3, A5, A7 ஆகிய மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங். டிஸ்பிளே முறையே 4.7 இன்ச், 5.2 இன்ச், 5.7 இன்ச். A5, A7 ஆகிய மாடல்கள் 16 எம்.பி ப்ரன்ட், ரியர் கேமராக்களை கொண்டுள்ளன. A3 மாடல் 13 எம்.பி ரியர் கேமராவும் 8 எம்.பி ப்ரன்ட் கேமராவும் கொண்டுள்ளது. மெட்டல் ப்ரேம், முப்பரிமாண க்ளாஸ் பேக் என தோற்றமே அசத்துகிறது. மூன்றுமே வாட்டர், டஸ்ட் ப்ரூஃப் மாடல்கள். முன்பதிவுகள் ஜனவரி 20 முதல் தொடங்குகின்றன.

 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored