ரூ.9999க்கு 32 ஜிபி ஸ்மார்ட்போன் - ரெட்மி நோட் 4 அதிரடி என்ட்ரி!Sponsoredஜியாமி நிறுவனம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் ரெட்மி வரிசை ஸ்மார்ட் போன்களில் சிறப்பானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களம் இறங்கியிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே க்ளாஸ் 2.5D curved glass-ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண ப்ளாட் க்ளாஸை விட சிறந்த ஒரு “வாவ்” அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம்.

5.5-inch 1080p IPS LCD டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போன். இது சென்ற வெளியீடான நோட்மி நோட் 3-ஐ காட்டிலும் ஃபெர்பாமன்ஸ் குறைந்த ப்ராஸசருடன் தயாராகியுள்ளது. சென்ற வெர்ஷனில் ஸ்னாப்ட்ராகன் 650 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் ரெட்மி நோட் 3-ஐ காட்டிலும் இதன் பேட்டரி திறன் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 4100mAh  பேட்டரி திறன் கொண்ட சற்று பெரிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் வேகமாக சார்ஜ் ஆவதில் உள்ள சிரமம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபில் ஹச்.டி டிஸ்ப்ளே வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.

Sponsored


Sponsored


இதன் முன்புற கேமரா 5 மெகாபிக்சலாலவும், பின்புற கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தில், ஆன்ட்ராய்டு மார்ஸ்மாலோ இயங்குதளம் கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. நெளகட் வெர்ஷன் அப்டேட்  பீட்டா டெஸ்டிங்கில் உள்ளது. இரண்டு சிம் வசதி மற்றும் 128ஜிபி எக்ஸ்டெண்டபிள் மெமரியுடன் அறிமுகமாகியுள்ளது.

ரெட்மி நோட் 4 மூன்று வித்தியாசமான மாடல்களில் வெளியாகிறது. 2GB RAM, 32GB மாடல் 9999 ரூபாய்க்கும், 3GB RAM, 32GB மாடல் 10,999 ரூபாய்க்கும், 4GB RAM , 64GB மாடல் 12,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. ஜனவரி 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு எம்.ஐ மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்களில் ஃப்ளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு வரவுள்ளது. கோல்ட், டார்க் க்ரே மற்றும் ப்ளாக் என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 

ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த விலை மாடல் போனாக அறிமுகமாகியுள்ள  இந்த போனில் மெமரி குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது. 32 ஜிபி மெமரி கொண்ட 10000 ரூபாய்க்குள் உள்ள போன்களில் நோட் 4 ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.  டிஸ்ப்ளே, வடிவமைப்பு அனைத்திலும் புதுமையை கையாண்டுள்ள ஜியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பிராண்டை விரிவுபடுத்தி கொள்ள நோட் 4-ஐ பயன்படுத்து கொள்ளும் என கணிக்கப்படுகிறது. 

ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored