மெக்ஸிகோ சுவரும், மெரினா புரட்சியும்! - ஜனவரியில் உலகின் மெகா தேடல்Sponsoredநாடுகள், எல்லைகள் என வரையறுக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்தாலும் உலகம் இன்று இணையம் எனும் தொழில்நுட்பத்தால் இணைந்திருக்கிறது. உலக மக்கள் ஒரே மாதிரியான உணர்வை உலகம் முழுவதும் குறிப்பிட்ட காலத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அப்படி ஒரு விஷயம் தான் இப்போது உலகம் முழுவதும் நடந்திருக்கிறது. இந்த புத்தாண்டு துவங்கியதிலிருந்து உலகின் பல பகுதிகளில் ஏதோ ஒரு மூளையில் போராட்டம் வெடித்து வந்துள்ளது. அது மெரினாவாக இருந்தாலும் சரி..சிரியாவாக இருந்தாலும் சரி போராட்டம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

2017ம் ஆண்டு துவங்கியதிலிருந்து உலகம் முழுவதும் போராட்டம் என்ற வார்த்தை பல நாடுகளில் ட்ரெண்டாகியுள்ளது. இந்த வார்த்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் செய்யும் போராட்டம் குறித்த செய்தியாகவும், போராட்டம் குறித்த உலக தேடலாகவும் இருந்துள்ளது. 

Sponsored


போராட்டம் என்ற வார்த்தையை அதிகம் தேடிய இடங்கள் என்று பார்த்தால் சர்வதேச அளவில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிரான அதிருப்தி குரல்களுடன் கூடிய போராட்டங்கள் தான். இரண்டாவது இடத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இடம் பிடித்துள்ளது. அலங்காநல்லூரும், மெரினாவும் தான் உலகின் எழுச்சி குரல் கேட்கும் இடங்களாக உள்ளன. 

Sponsored


அமெரிக்காவையும் உலகையும் திரும்பி பார்க்க வைத்த ''வுமன் மார்ச்'' போராட்டத்தை விடவும் அதிகமான அதிர்வலைகளை ஜல்லிக்கட்டு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் போராட்டம் அதன் இணைய போராளிகளோடு ஒப்பிடும் போது குறைவு. ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழ்நாடு எனும் ஒரு மாநிலத்தில் நடக்கும் பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளது. கடைசி 24 மணி நேர இணைய தேடல்களில் ஜல்லிக்கட்டு தான் உலகின் தலையாய பிரச்னையாக இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம் கடந்த 24 மணி நேரத்தில் மெரினா புரட்சி தான் உலகின் மிகப்பெரிய போராட்டம். 

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்ப முடியும். இந்திய தேசிய ட்ரெண்டிங்கில் ஜல்லிக்கட்டை கொண்டு வந்ததும் தமிழர்கள் தான். ட்ரம்ப்பையும் தாண்டி உலகின் பிரச்னையாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்பதற்கு எழுந்த எதிர்ப்பைவிட வாடிவாசலுக்கான குரல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. நாளை போராட்டம் இணையத்துக்கு வா தோழா என வடிவம் மாறி இருக்கிறது இன்றைய ஜென் இஸ்ட் தலைமுறையின் போராட்டங்கள். 

ச.ஸ்ரீராம்

படம்: தே.அசோக்குமார்Trending Articles

Sponsored