இதற்குத்தானா ஆசைப்பட்டார் ரெட்மீ துணைத்தலைவர் ஹூகோ பாரா?Sponsoredஜியோமியின் துணைத்தலைவராக இருக்கும் ஹூகோ பாரா ''சில வருடங்களாகவே நான் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். என்னோடு யாருமே இல்லாதது போன்ற உணர்வு. என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்ப‌டுத்தியதோடு, என் உடல் நிலையையும் பாதித்துள்ளது. நான் எனது வீட்டிற்கே திரும்ப உள்ளேன். சிலிக்கான் வேலிக்கு திரும்ப இதுவே சரியான நேரம்'' என்று கூறி பிப்ரவரி மாதத்துடன் ஜியோமியிலிருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி புதிய வேலையை தேர்ந்தெடுக்க எனக்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

Sponsored


ஆனால் இன்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஸ்டேட்டஸ் டெக் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் மார்க் ''நான் ஹூகோ பாரா வை ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவை தலைமை தாங்க அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமின்றி இனி அக்குலஸையும் அவர் தான் வழிநடத்துவார். தற்போது அவர் சீனாவில் இருக்கிறார். அதனால் நாங்கள் தற்போது விர்ச்சுவலாக இணைந்து பணியாற்றவுள்ளோம்.

Sponsored


எனக்கு ஹூகோவை நீண்ட நாட்களாக தெரியும். அவர் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் உதவியாக இருந்ததிலிருந்து அவரை நான் அறிவேன். அவர் ஜியோமியில் இணைந்து பல புதுமைகளை செய்து பல மில்லியன் மக்களிடம் ஸ்மார்ட்போனை கொண்டு சேர்த்துள்ளார். ஆகுமெண்டட் ரியாலிட்டி தான் கணினி உலகின் அடுத்த புதுமைக்கான களம். இது குறித்து நிறைய பேசினோம். எதிர்கால திட்டங்களில் ஹூகோ அதிகம் உதவுவார். அவரது வருகையை ஃபேஸ்புக் எதிர்நோக்கியுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். ஹூகோ பாராவும் ’’இன்னும் இரண்டு மாதத்தில் ஃபேஸ்புக்கில் இணைந்துவிடுவேன். இங்கு பணியாற்றுவதில் மகிழ்ச்சி’’ என்று கூறியுள்ளார். 

ஹூகோ பாரா ஃபேஸ்புக்கில் இணையும் ஐடியா இருந்ததால் தான் ஜியோமியில் இருந்து விலகியுள்ளார். தன்னை அனைத்து துறைகளிலும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹூகோ பாரா இந்தியாவில் ஜியோமிக்கு என தனி சந்தையை உருவாக்கியவர். இந்தியா போன்ற நாட்டில் சிறப்பாக செயல்படுவதை அறிந்த மார்க் வைத்த செக் தான் ஹூகோ பாராவை ஃபேஸ்புக்கிற்கு வரவழைத்திருக்கும் என்று டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ஹூகோ பாராவின் ஃபேர்வெல் கடிதம்:

''எம்.ஐ ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு 3.5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சரியாக 4 வருடங்களுக்கு முன்னால் லெய் ஜுன் மற்றும் பின் லின் ஆகிய இருவரும் ஒரு ஸ்டார்ட் அப்பை சர்வதேச நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை அணுகினார்கள். அவர்களது திட்டத்தை கேட்டு நான் சிலிக்கான் வேலியிலிருந்து 6500 மைல்கள் தாண்டியுள்ள பீஜிங்கிற்கு குடிபெயர்ந்தேன். ஜியோமி தான் எனது முதல் திட்டம். நான் உலகிற்கு கொண்டு  வந்த முதல் தயாரிப்பு.

ஆனால் சமீபகாலமாக சில வருடங்களாகவே நான் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். என்னோடு யாருமே இல்லாதது போன்ற உணர்வு. என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்ப‌டுத்தியதோடு, என் உடல் நிலையையும் பாதித்துள்ளது. நான் எனது வீட்டிற்கே திரும்ப உள்ளேன். சிலிக்கான் வேலிக்கு திரும்ப இதுவே சரியான நேரம்.

ஜியோமியின் நல்ல முன்னேற்றத்தில் பங்குவகித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கனவுகளில் ஒன்று இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை அமைப்பது. இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் ஆண்டு வருமானத்தை ஈட்டியது பெருமைப்படும் விஷயங்களில் ஒன்று. நான் ஜியோமியின் நிறுவனர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறேன். குறிப்பாக சிஇஓ லெய் ஜுன்னுக்கு நன்றி. அவர் எனக்கு ஒரு சிறந்த மெண்டாராக இருந்துள்ளார். சீனாவின் டெக்னாலஜி உலக நாடுகளில் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் ஜியோமியின் பங்களிப்பு அதிகம். அவர்கள் என்னை நிரந்தர ஆலோசகராக இருக்க சொல்லி கேட்டார்கள் 

நான் பிப்ரவரி மாதம்தான் சிலிக்கான் வேலி செல்ல உள்ளேன். எனக்கு முடிவெடுப்பதற்கு சிறிதுகாலம் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள அனைத்து எம்.ஐ ரசிகர்களுக்கும் நன்றி. நான் என்றுமே எம்.ஐயின் ரசிகனாக உங்கள் மனதில் இடம்பிடிக்க விரும்புகிறேன்''

நன்றி

- ஹூகோ பாரா

ச.ஸ்ரீராம்
Trending Articles

Sponsored