என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்!மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்!

Sponsored


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

Sponsored


இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே. அனைவரும் மறைமுகமாக ட்ரம்ப்பை தாக்கி பேசி வந்த நிலையில் முதல் முறையாக ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

Sponsored


இன்று அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க் கூறியிருப்பதாவது ''எனது மூதாதையர்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் போலந்திலிருந்து வந்தவர்கள். பிரிசில்லாவின் பெற்றோர் சீனா மற்றும் வியட்நாமிலிருந்து வந்த அகதிகள். அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் உருவான நாடு. அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

என்னை போல பலரும் அமெரிக்க அதிபரின் புதிய உத்தரவு பற்றி எண்ணி கொண்டிருப்பீர்கள். இந்த நாட்டை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்காக மில்லியன் கணக்கில் உள்ள பதிவுசெய்யப்படாத புலம்பெயர்ந்த மக்களை பயத்தில் ஆழ்த்துவது நியாமல்ல.

நாம் அகதிகளுக்கு உதவுவதற்காக நம் நாட்டின் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும். அப்படியில்லை என்று முன்பு யாராவது கூறியிருந்தால் இன்று பிரிசில்லாவின் குடும்பம் இங்கு இருந்திருக்காது. அதனால் இந்த நாட்டில் சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் குடியேறியவர்களை கவனத்தில் கொண்டு, அதுபோல் உள்ள 7.5 லட்சம் பேரை இந்த நாட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பை அதிகரிக்க ட்ரம்ப் மற்றும் அவரது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் உதவ தயாரக இருக்கிறோம்.

இந்த நாட்டில் உள்ள திறமையான மக்களால் அரசுக்கு நன்மை அதிகம் என்பதை அதிபர் ட்ரம்ப் நம்ப வேண்டும். இந்த விஷயங்கள் எனது குடும்பம் என்பதை தாண்டி என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்தன. சில காலங்களுக்கு முன்னால் ஒரு பள்ளியில் பாடம் எடுக்க சென்றிருந்தேன். அங்கு மிக திறமையுள்ள மாணவர்கள் பதிவு செய்யப்படாத புலம் பெயர்ந்த மக்கள். அவர்கள் தான் அமெரிக்காவின் எதிர்காலம். மீண்டும் கூறி கொள்கிறேன் அமெரிக்கா புலம்பெயந்தவர்களால் ஆன நாடு. உலகின் திறமையானவர்கள் வாழ விரும்பும் நாடு. அவர்களது வேலை மற்றும் பங்களிப்பை இந்த நாட்டுக்காக அளிக்கின்றனர். அமெரிக்காவை உலகில் வாழ மிகவும் தகுதியான இடமாக மாற்றுவோம்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் ட்ரம்ப்பை நேரடியாக குறிப்பிட்டு பேசாத மார்க் இப்போது பேசியதற்கு இன்னோரு காரணம் ஃபேஸ்புக்கின் பல ஊழியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்கள். வர்த்தக ரீதியாகவும் ஃபேஸ்புக் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதும் மார்க்கின் இந்த அறிக்கைக்கு மறைமுக காரணமாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பை விமர்சிக்க தயங்கும் வேளையில் மார்க்கின் முதல் குரல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

-ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored