800 ரூபாய் பட்ஜெட்... எந்த இயர்ஃபோன் சிறந்தது? #BudgetGadgetsSponsoredபோனோட வந்த இயர்ஃபோன்லயே பாட்டு கேட்க போர் அடிக்குதா பாஸ்? ஃப்ளிப்கார்ட், அமேசான்னு போய் தேடுனா 10,000, 15,000 ரூபாய்னு விலை போட்டு இருக்கா? எது நல்ல ஹெட்போன் / இயர்போன், எது சரியான விலை என தேர்வு செய்யவே முடியாம குழப்பமா இருக்கா? உங்களுக்கு உதவி செய்யதான் இந்த லிஸ்ட். 800 ரூபாய் பட்ஜெட்டில் வாங்கக் கூடிய ஹெட்போன்ஸ் / இயர்போன்ஸ் இதோ...

மோட்டோ பல்ஸ் 2:

Sponsored


மியூசிக் லவ்வர்ஸ்க்காக, மோட்டோரோலா வெளியிட்ட ஹெட்போன்தான் பல்ஸ் 2. 36mm டிரைவர் இருக்கற இந்த ஹெட்போனில் இருந்து வொயர தனியா எடுக்கலாம். அதனால் ஈஸியா எங்க வேணா எடுத்துட்டு போலாம். மைக் இருக்கு, அதுனால ஒவ்வொரு முறையும் கால் வரும்போது ஹெட்போன போனில் இருந்து எடுக்க வேணாம். கம்மி பட்ஜெட்டில், கரெக்டான மியூசிக் குவாலிட்டி என நல்ல ரெவ்யூஸ் கொடுத்துருக்காங்க நெட்டிசன்ஸ்!

Sponsored


இதை வாங்க http://amzn.to/2frpnu7

பிலிப்ஸ் SHL3060BK/00:

பல வருஷமா ரேடியோ, ஸ்பீக்கர் என இசை உலகத்துல கொடி கட்டி பறந்த நிறுவனம் பிலிப்ஸ். போட்டி அதிகமா இருந்தாலும் பிலிப்ஸின் நம்பகத்தன்மை இன்றைக்கு வரைக்கும் மக்கள் கிட்ட வரவேற்பை பெற்று இருக்கு. 32mm டிரைவர் இருக்கற இந்த ஹெட்போன்ஸ், டி.ஜேஸ் போடற மாறி டிசைன் பண்ணிருக்காங்க. ஆனா மைக் கிடையாது. அதுனால போன் பேச முடியாது. மியூசிக் குவாலிட்டி சூப்பர்.

இதை வாங்க http://amzn.to/2f9uprV

சோனி MDR-AS200;

மேலே நாம் பார்த்த இரண்டும் ஹெட்போன்ஸ். ஆனால் இந்த மாடல் ஒரு ஹெட்போன் இல்ல, இயர்போன். ஸ்பெஷல் என்னனா இது ஒரு ஸ்போர்ட்ஸ் இயர்போன். ஜிம் போறவங்க, காலைல ஜாக்கிங் போறவங்க, சீக்கிரம் அறுந்து போகாத மாறி ஒரு இயர்போன் வேணும்னா இத வாங்கலாம். மைக் கிடையாது. காதுலேந்து விழாத மாறி ஒரு டிசைன். வியர்வை பட்டா ஒண்ணும் ஆகாது. ஸ்போர்ட்ஸ் இயர்போன், அதுனால மியூசிக் குவாலிட்டி புரபொஷனல் இயர்போன் அளவுக்கு இருக்காது. ஸ்போர்ட்ஸ் இயர்போன்தான் வேண்டும் என்பவர்களுக்கு குட் சாய்ஸ்.

இதை வாங்க http://amzn.to/2f9tO9H

ஜே.பி.எல் C100SI:

காதுல மாட்டினா உலகத்தையே மறக்கணும்னு நினைக்கறவங்களுக்குத்தான் இந்த இயர்போன். இது இன் இயர் டைப் (In-Ear Type). பொதுவா இந்த மாறி ஹெட்போன்ல வெளிலேந்து சத்தம் கேக்காது. ஒன்லி மியூசிக் தான். மைக் இருக்கு, கால்ஸ் பேசலாம். 9 mm டிரைவர். அதே மாதிரி  மூணு சைஸ்ல இயர் பட்ஸும் கூடவே வரும். உங்க தேவைக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணலாம். நல்ல மியூசிக் குவாலிட்டி இருக்கற இந்த ஹெட்போனை வாங்க: http://amzn.to/2f9tJmv

சென்ஹைசர் CX180 STREET II:

மியூசிக் வேர்ல்ட்ல ஒரு இன்ட்ரோவே தேவை இல்லாத பிராண்ட் தான் சென்ஹைசர். இதை வாங்க நான் என் கிட்னிய வித்துட்டேன்னு சொல்ற பசங்க எல்லாம் இருக்காங்க! காரணம் இதோட விலைதான். இந்த பிராண்ட் இயர்போன்களின் ஸ்டார்ட்டிங் விலையே 799 தான். அது தான் இந்த இயர் போன். 9 mm டிரைவர். செம மியூசிக் குவாலிட்டி. ஆனா மைக் கிடையாது. மியூசிக் பிரியர்கள் மட்டும் பார்த்து டிக் அடிக்கலாம்.

இதை வாங்க http://amzn.to/2fNMVaG

சேட்ஸ் T-POWER SA-701:

நிறைய பேருக்கு தெரியாத பிராண்டா இருந்தாலும், இந்த ஹெட்போன் நிறைய பேரால பேசப்படுது. கேமிங் பண்றவங்க யூஸ் பண்ற மாறி ஸ்டைலிஷ் டிசைன், 40 mm டிரைவர். ஆனா மைக்குக்கு ஒரு பின், ஹெட்போன்க்கு ஒரு பின் என தனித் தனியா வரும். கொஞ்சம் பெருசு தான். தனித்தனி பின் இருக்கறதுனால கம்ப்யூட்டர்ல யூஸ் பண்ணதான் வசதியா இருக்கும். கேமிங் பிரியர்களுக்கு கைகொடுக்கும் இதனை வாங்க http://amzn.to/2eTvJ1j

- ம.சக்கரராஜன்

மாணவப் பத்திரிகையாளர்Trending Articles

Sponsored