இந்தப் பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கிறதா? உஷார்! #SecurityTips



Sponsored



டந்த ஆண்டில் அதிகம் பேர் பயன்படுத்தும், பொதுவான 25 பாஸ்வேர்டுகளை வெளியிட்டுள்ளது, கீப்பர்செக்யூரிட்டி என்னும் நிறுவனம். அந்த 25 பாஸ்வேர்டுகளையும் பார்த்தால் நிஜமாகவே அதிர்ச்சி ஏற்படுவது நிச்சயம். சுமார் 10 மில்லியன் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறது அந்நிறுவனம். இன்றும்  உலகில் 17 % பேர், '123456' என்ற பாஸ்வேர்டைக் கொண்டுதான் தங்கள் கணக்குகளை நிர்வகிக்கின்றனர். Qwerty, 1234, password, 123123 போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள்தான் இன்றளவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். ஆன்லைன் மோசடிகள், ஹேக்கிங் தாக்குதல்கள் போன்றவை வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. எனவே, உங்கள் கணக்குகளை கூடுதல் பொறுப்புடன் பாதுகாக்கக்கூடிய பொறுப்பும் உங்களுக்கே இருக்கிறது.

Sponsored


கடந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட 25 பாஸ்வேர்டுகள் இவைதான்!

Sponsored


1. 123456

2. 123456789

3. qwerty

4. 12345678

5. 111111

6. 1234567890

7. 1234567

8. password

9. 123123

10. 987654321

11. qwertyuiop

12. mynoob

13. 123321

14. 666666

15. 18atcskd2w

16. 7777777

17. 1q2w3e4r

18. 654321

19. 555555

20. 3rjs1la7qe

21. google

22. 1q2w3e4r5t

23. 123qwe

24. zxcvbnm

25. 1q2w3e

இவற்றில், முதல் 10 பாஸ்வேர்டுகளுமே எளிதில் யூகிக்கக் கூடியவை. எனவே, உங்கள் அக்கவுன்ட்களுக்கு நிச்சயமாக இது போன்ற பாஸ்வேர்டுகளை வைக்காதீர்கள். அதுமட்டுமின்றி இத்துடன் தொடர்புடைய பாஸ்வேர்டுகளும் தவிர்க்கப்படவேண்டியவையே! உதாரணமாக, உங்கள் பெயர் மற்றும் 123, Password123 போன்ற பாஸ்வேர்டுகளும் வேண்டாம். 

எளிதில் யூகிக்கக்கூடிய, உங்களை சுற்றியுள்ளவர்களால் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய உங்கள் பெயர், மொபைல் எண் போன்ற எளிதான பாஸ்வேர்டுகளைத் தவிர்க்கவும். மாறாக, இவற்றுடன் எண்கள் மற்றும் குறியீடுகள் ஆகியவற்றைக்கொண்டு, கடினமான பாஸ்வேர்டுகளை அமைக்கலாம்.

மிகவும் சிறிதான பாஸ்வேர்டுகள் மற்றும் பலவீனமான பாஸ்வேர்டுகளை, பாதுகாப்பு கருதி பல தளங்கள் அனுமதிப்பதில்லை. எனவே, இவற்றை நீங்களும் பின்பற்றுங்கள். உங்களது ஒவ்வொரு பாஸ்வேர்டும் 8 எழுத்துக்களுக்கு மேல்தான் இருக்க வேண்டும்.
ஒரே பாஸ்வேர்டை உங்களது எல்லா கணக்குகளுக்கும் பயன்படுத்துவதும் ஆபத்தானது. உங்கள் பாஸ்வேர்டை ஹேக்கர்ஸ் யூகித்துவிட்டால், பின்பு உங்களது எல்லா கணக்குகளுமே பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. 

உங்களுக்கு உதவ நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் ஆப்ஸ்கள், மென்பொருட்கள் நிறைய இருக்கின்றன. தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பலருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்திருந்தாலும்கூட, பழைய பாஸ்வேர்டுகளையே தொடரக் காரணம், அதன் எளிமைதான். அடுத்தது, 'நம்ம அக்கவுன்ட்டை எல்லாம் யார் ஹேக் செய்யப்போறாங்க?' என்ற நம்பிக்கை. இந்த இரண்டுமே ஹேக்கர்களுக்கு வசதியான விஷயமாக இருக்கிறது.

உங்களுடைய தகவல்களை, முன்பின் தெரியாத, எங்கோ இருக்கிற நபர் திருட முயற்சிக்கிறார் என்றால், உங்களுடைய தகவல் உங்களை விடவும் அவருக்கு முக்கியமானது என்பதை  நீங்கள் புரிந்துகொள்ளலாம். எனவே, இன்னும் உங்கள் கணக்குகளுக்கு எளிதான பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்கள்!

- ஞா.சுதாகர்.
 



Trending Articles

Sponsored