’நாங்க ஃபேஸ்புக்குக்கே சீனியர்!’ - லைவ் ஸ்ட்ரீம் ஆப்ஸின் கெத்து! #MobileApps



ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு ஒரு கருத்து அல்லது தகவலை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க வீடியோக்கள்தான் அதிகம் பயன்படுகின்றன. அதில் ட்ரெண்டிங்கில் இருப்பது லைவ் ஸ்ட்ரீமிங் தான். இதன் மூலமாக நாம் பார்ப்பதை வீடியோவாக ஒரே நொடியில் உலகம் முழுவதும் ஒளிபரப்ப முடியும்.. ஃபேஸ்புக்கில் உள்ள லைவ் வசதியை பெரும்பாலான மக்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால், இன்னும் நிறைய வசதிகளுடன் லைவ் ஸ்ட்ரீம் செய்ய ஏகப்பட்ட ஆப்கள் உள்ளன. அதில டாப் 5 பற்றிய அறிமுகம் இங்கே..

பெரிஸ்கோப்

Sponsored


  

ட்விட்டரில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு பயன்படும் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பயன்படும் ஆப்களில் ஒன்று. லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர் மட்டும் ஆப் வைத்திருந்தால் போதுமானது. மற்றவர்களின் ட்விட்டர் டைம்லைனிலேயே லைவ் வீடியோவை பார்க்க முடியும் என்பதும் பயன்படுத்த மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் இதன் ப்ளஸ்... ஆனால் ட்விட்டரில் அக்கவுண்ட் இருந்தால் தான் இதை உபயோகப்படுத்த முடியும் என்பது இதன் மிகப்பெரிய மைனஸ்.

Sponsored


செயலியின் அளவு-11 MB
ரேட்டிங்-4.5
பெரிஸ்கோப்பை டவுன்லோட் செய்வதற்கு

Sponsored


இன்ஸ்டாகிராம்

  

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்,விண்டோஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் சக்கை போடு போடுவது இன்ஸ்டாகிராம்தான். உலகம் முழுதும் 600 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாகிரமை உபயோகப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருந்தால் எளிதில் உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் தனியே ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராமை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் அப்லோட் செய்யப்படும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஆப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். லைவ் முடிந்ததும் வீடியோ காணாமல் போய்விடும். ஃபேஸ்புக் லைவ்-ல் சேமித்து வைப்பதை போல இன்ஸ்டாகிராம் வைக்காது. இன்ஸ்டா லைவ் ஃபேஸ்புக்குக்கு ஜூனியர்தான். 2016 இறுதியில் தான் இந்த வசதியை அறிமுகம் செய்தது.

செயலியின் அளவு-19 எம்பி
ரேட்டிங்-4.5
இன்ஸ்டாகிராமை டவுன்லோட் செய்வதற்கு

லைவ் ஸ்ட்ரீம்

  

2007 ம் ஆண்டு வெளியான இந்த ஆப்தான் ஸ்மார்ட்போன் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் என்பதற்கு அடிக்கல் நாட்டியது. இதைப் பின்பற்றியே மற்ற ஆப்கள் உருவாக்கப்பட்டன.. பயன்படுத்த மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வீடியோக்களை பிரிவுகளால பிரித்து காட்டப்படுவதால் விருப்பமான வீடியோவை எளிதில் பார்க்கலாம். மேலும் இதை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் வீடியோக்களை பதிவேற்றலாம் என்பது போனஸ் ஹைலைட்.

செயலியின் அளவு-58 எம்பி
ரேட்டிங்-4.1
லைவ் ஸ்ட்ரீமை டவுன்லோட் செய்வதற்கு

ஸ்ட்ரீமாகோ

  

கிட்டத்தட்ட பேஸ்புக் லைவ் போலவே இருக்கும் இதில் விரும்பும் மொழிகளில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வீடியோக்கைளை தேர்ந்தெடுத்து பார்க்கலாம். விரும்பும் நபர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்கள் ஸ்ட்ரீமிங் செய்யும் வீடியோக்களை பார்க்கலாம். மேலும் இந்த ஆப்பில் விரும்பும் நபர்களுடன் தனியாகவோ அல்லது சில நபர்களுக்கு மட்டுமோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்பது மற்ற எந்த ஆப்பிலும் இல்லாத ஒரு வசதி..

செயலின் அளவு-31 எம்பி
ரேட்டிங்-4.2
டவுன்லோட் செய்வதற்கு

பிராட்காஸ்ட் மீ

  

இதுவரை ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கி வந்த இந்த ஆப் தற்பொழுது ஆண்ட்ராய்டில் சோதனை பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மற்ற லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்களை போல் இல்லாமல் இது முற்றிலும் வேறுபட்டது. இதன் மூலம் நமது வீடியோவை மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இயலும். மற்றவர்களின் வீடியோக்களை பார்க்க முடியாது.

இதை பயன்படுத்த தனியே அக்கவுண்ட் உருவாக்கவும் தேவையில்லை. வீடியோவின் தரத்தை மாற்றியமைக்கலாம் மற்றும் இனையதள முகவரி மூலமாக தேவைப்படும் இணையதளத்தில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

செயலியின் அளவு-24 எம்பி
டவுன்லோட் செய்வதற்கு

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்



Trending Articles

Sponsored