3ஜி வேகம் கூட்ட உதவும் சில டிப்ஸ்! #GadgetsTipsSponsoredமோடிஜி, சோனியாஜியை விட இந்தியர்களின் மிகப்பெரிய கவலை 3ஜி. மலைக்கு போனா கூட ஸ்பீடு பறக்கும், கிராமத்துக்கு போனா கூட சிக்னல் தெறிக்கும்னு ஏகப்பட்ட விளம்பரங்கள். ஆனால், 4 எம்பி பாட்டை டவுன்லோடு பண்ண கூட ரேஷன் கடை க்யூல நிக்கிற ஃபீலைதான் பெரும்பாலும் நம்ம டெலிகாம் கம்பெனிகள் கொடுக்குது. இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும், கிடைக்குற 3ஜி வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்ட சில வழிகள் இருக்கு. வாங்க பாக்கலாம்.

1) பிரவுசர்

Sponsored


என்ன படம் பாக்குறோன்றது எவ்ளோ முக்கியமோ, அதே அளவு முக்கியம் எங்க பாக்குறோம் என்பதும். அதே மாதிரிதான் பிரவுசரும். நாம படிக்கிறது ஸ்போர்ட்ஸ் வெப்சைட்டோ, சமையல் வெப்சைட்டோ... சரியான பிரவுசர் அவசியம். ஆண்ட்ராய்டு நண்பர்களுக்கு கூகுள் க்ரோம் தான் பெஸ்ட். மொபைல், டேப்லட், லேப்டாப், கம்ப்யூட்டர்ன்னு எல்லா டிவஸையும் சரியா சிங்க் பண்ணிக்கும். நம்ம பாஸ்வேர்டுல இருந்து பல விஷயங்களை சேமிச்சு, சரியான சமயத்துல நேரத்தை மிச்சம் பண்ணும். ஆனா பாருங்க, டேட்டாவை காலி பண்ணும். க்ரோம் வசதியான பிரவுசர். ஆனால், டேட்டா அடிப்படையில் காஸ்ட்லியான புரவுசர். அதனால, மொபைல் டேட்டாவுல இருக்கிறப்ப க்ரோமுக்கு பதிலா ஒபேரா அல்லது ஒபேரா மினி பயன்படுத்தலாம். இவை டேட்டாவை குறைவா பயன்படுத்தும். போனஸா, அதிக டேட்டா சபபிடுற அப்ளிகேஷன்ஸை தேடி கண்டுபிடிச்சு கேப்டன் மாதிரி க்ளோஸ் பண்ணிடும்.

Sponsored


2) பிரவுசரின் படங்களுக்கு தடா போடுங்கள்

எல்லா வெப்சைட்டிலும் படங்கள் நிறைய இருக்கும். நமக்கு தேவையற்ற படங்களும் அதில் அடங்கும். இதையும் டவுன்லோடு செய்தே பிரவுசர்கள் காட்டும். இதனால், டேட்டா செலவாகும். வேகமும் குறையும். எல்லா பிரவுசரிலும் இந்த ஆப்ஷன் இருக்காது. ஆனால், மொபைலின் செட்டிங்ஸில் அது இருக்கும். அதை கண்டுபிடித்து ஆஃப் செய்துவிடுங்கள். text only mode 30% டேட்டாவை மிச்சப்படுத்தும். வேகத்தை அதிகரிக்கும்.

3) chache க்ளியர் செய்யுங்கள்:

பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களின் சாபக்கேடு இந்த கேஷ் மெமரி. நிறைய பிரவுஸ் செய்ய செய்ய, கேஷ் சேர்ந்துக் கொண்டே போகும். இதனால், இணைய வேகம் கணிசமாக குறையும். cache clear செய்யவே நிறைய ஆப்ஸ் ப்லே ஸ்டோரில் உண்டு. ஆனால், அதற்கு பதிலாக, மொபைல் செட்டிங்கிலே இதை க்ளியர் செய்யலாம். Settings > Applications போய் எந்த அப்ளிகேஷனில் அதிக கேஷ் இருக்கோ, அதை க்ளியர் செய்யலாம். இதனால 3ஜி வேகம் நிச்சயம் அதிகரிக்கும்.

4) படா படா ஆப்பை அழியுங்கள்:

நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஆப், 10 எம்பிக்கும் குறைவாக இருக்கும். ஆனால், எப்போதோ பயன்படுத்தும் ஆப், 100 எம்பி கூட இருக்கும். பேக்கிரவுண்டில் ஓடிக்கொண்டேயிருக்கும் அந்த ஆப், மொபைலின் வேகத்தையே குறைக்கும். இணைய வேகமும் குறையும். அந்த மாதிரியான அப்ளிகேஷன்களை கண்டறிந்து டெலீட் செய்துவிடலாம். அதே வேலையை செய்யும் வேறு சிறிய, நல்ல ஆப்களை தேடி பயன்படுத்தலாம்.

ஆன்லைனில் இருந்தால் மொபைல் சார்ஜ் குறைவது ஏன் என்பதை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

 -கார்க்கிபவாTrending Articles

Sponsored