இந்திய தேர்தலுக்காக ஃபேஸ்புக்கில் இரண்டு புதிய டூல்கள்..!SponsoredPoke செய்யதான் முதலில் ஃபேஸ்புக் வாய்ப்பளித்தது. பின், உலகின் எதாவது ஒரு மூலையில் பெரிய சம்பவம் நடந்தால் அது பற்றி பேச வழி செய்தது. இயற்கை பேரிடர் காலங்களில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வசதி வந்தது. இப்போது இந்தியாவின் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் ஃபேஸ்புக்கும் தனது சிறிய பங்களிப்பைத் தர இருக்கிறது.

தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய டூல்களை உருவாக்கியிருக்கிறது. தேர்தல் நடக்கும் நாட்களில் அந்த பகுதிகளில் இருக்கும் 18 வயதைத் தாண்டியவர்களின் டைம்லைனில் “Polling day reminder" வரும். அந்த பட்டனை க்ளிக் செய்தால், அது இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு செல்லும். அங்கே, வாக்காளர்கள் தங்களது வாக்குரிமை பற்றிய தகவல்கள், வாக்கு மையம் பற்றிய தகவல்கள் போன்றவற்றை பார்த்துக் கொள்ளலாம். 

Sponsored


அதே போல share you voted என இன்னொரு பட்டனும் இருக்கும்.தேர்தலில் வாக்களித்தவர்கள் அதை க்ளிக் செய்து தாங்கள் வாக்களித்து விட்டோம் என்பதை தங்களது ஃபேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால், வாக்களித்துவிட்டோம் என்பதை மற்றவர்களோடு பகிர்வதன் மூலம் மற்றவர்களையும் வாக்களிக்க உற்சாகம் மூட்டலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sponsored


இது பற்றிய ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரி அங்கி தாஸ் சொல்லும்போது “பொதுமக்களின் பங்களிப்பை தேர்தல் சமயத்தில் அதிகரிக்க ஃபேஸ்புக் விரும்புகிறது. அதற்காகத்தான் இந்த இரண்டு புதிய வசதிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். தேர்தல் ப்ராசஸில் குடிமக்கள் அதிகம் பங்குபெறவும், அது பற்றி பேசவும் இவை உதவும்” என்றார்.

வாக்காளர்கள் மட்டுமல்ல; வேட்பாளர்களுக்கும் ஃபேஸ்புக் உதவுகிறது. வேட்பாளர்கள்  தங்களைப் பற்றி, தங்கள் வாக்குறுதிகள் பற்றி 200 வார்த்தைகளில் எழுதலாம். மேலும், ஃபேஸ்புக் உருவாக்கியிருக்கும் 20 கேட்டகிரியிலும் தங்களது வாக்குறுதிகள், முந்தைய சாதனைகளை ஆகியவற்றை தொகுக்கலாம். பட்ஜெட், கல்வி, வளர்ச்சி, சுகாதாரம் என  இந்திய தேர்தல்களில் அதிகம் பேசப்படும் 20 தலைப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. 

முதன் முதலாக 2008 அமெரிக்க தேர்தலின் போதுதான் ஃபேஸ்புக் இந்த மாதிரியான “election day reminder" வசதியை கொண்டு வந்தது. 2008 தேர்தலின் போது I voted பட்டனையும் கொண்டு வந்தது. அதன்மூலம் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ரியல் டைமில் காட்டியது ஃபேஸ்புக். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி பெரிய வெற்றி பெற்றது. 2008 தேர்தலில் மட்டும் 54 லட்சம் பேர் வாக்களித்துவிட்டு ஃபேஸ்புக்கின் i voted பட்டனையும் க்ளிக் செய்திருந்தார்கள். 

-கார்க்கிபவா


 Trending Articles

Sponsored