மொபைலின் நுண்துளைகளை சுத்தம் செய்வது எப்படி? #GadgetsTipsஎன்னதான் கவர், ஸ்கிரீன் கார்ட் என்று ஸ்மார்ட்போனுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பல பொருட்கள் இருந்தாலும் நுண்ணிய தூசிகளால் மொபைலுக்கு நிச்சயம் பிரச்னையே. அதுவும் காந்தத் தன்மையுள்ள துகள்களால் ஸ்மார்ட்போனின் இயக்கம் தடைபடும் அளவுக்கு வாய்ப்புள்ளது. இது போன்ற நுண்ணிய துகள்கள் நுழைவதற்கு வழி நமது மொபைலில் இருக்கும் சார்ஜிங் போர்ட் துளைகள்தான். நாம் பயணங்களில் இருக்கும் போது, விளையாடும் போது நமக்கே தெரியாமல் தூசிகள் இந்த துளைகளை நிரப்பி விடுகிறன. இதனால் சார்ஜ் செய்தாலும், ஹெட்போன் போட்டாலும் சரியாக வேலை செய்யாமல் போகும். அப்படி அந்த துளைகளில் தூசி இருந்தால் எவ்வாறு அதை சரி செய்யலாம்.

Sponsored


ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு

Sponsored


Sponsored


பொதுவாக ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் தூசிகள் உள்ளே செல்லாதவாறே வடிவமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அதில் சார்ஜிங் போர்ட்டில் தூசிகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இதை சுத்தம் செய்யாவிட்டால் சார்ஜ் ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். அதை சிம் எஜெக்டரை (Sim ejector) பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் அல்லது சிறிய உலோகமில்லாத பொருட்களை கொண்டு மற்ற பகுதிகள் பாதிக்காத வண்ணம் மெதுவாக சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்யலாம். இவ்வாறு செய்வதின் மூலம் துளைகளில் நிரம்பியுள்ள தூசிகள் மற்றும் இதர பொருட்களை எளிதில் நீக்கிவிடலாம். 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு

ஆண்ட்ராய்டிலும் இது போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. இதை சரி செய்வதற்கு மேலே குறிப்பிட்ட வழியை பயன்படுத்தலாம் என்றாலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜிங் போர்ட் வேறு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனுள் வேறு பொருளை செலுத்தி சுத்தம் செய்ய முடியாது. எனவே அழுத்தப்பட்ட காற்றை பயன்படுத்தி தூசிகளை அகற்றலாம். அழுத்தப்பட்ட காற்றை மெதுவாக உட்செலுத்துதினால் காற்றின் வேகத்தால் உள்ளிருக்கும் தூசிகளை அப்புறப்படுத்தலாம். இந்த முறையை உபயோகப்படுத்தும் போது காற்றின் அழுத்தம் 40PSI என்ற அளவில் இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதிக அழுத்ததின் காரணமாக நமது மொபைலின் நுண்ணிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.

வாக்யூம் க்ளீனர் மூலமாகவும் இதை சுத்தப்படுத்தலாம். வாக்யூம் க்ளீனரில் Suction port, exhaust port என இரண்டு முனைகள் இருக்கும். அதாவது, காற்று உள்ளிழுக்கும் பகுதி, காற்றி வெளியேறும் பகுதி. இதில் காற்று வெளியறும் பகுதியை பயன்படுத்தி மொபைலின் நுண்ணிய துளைகளை சுத்தப்படுத்தலாம். 

- மு. முருகன் (மாணவப் பத்திரிகையாளர்) 

 Trending Articles

Sponsored