டிரம்ப்பை ட்விட்டரில் ட்ரோல் செய்ததா நாசா?Sponsoredஅமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகப்பெரிய சவால்கள் பல காத்திருக்கின்றன. அதில் மிக முக்கியமானது ட்விட்டர் என்றால் நம்புவீர்களா? அவர் டிவிட்டரில் என்ன சொன்னாலும் கலாய்ப்பதற்கென்றே லட்சக்கணக்கில் கிளம்பி வருகிறார்கள். "இவரை ட்ரோல் செய்றது ஈசி. இவர் போற இடத்துல எல்லாம் ஆள போடுங்கப்பா" என வடிவேலு கணக்காக மாறிவிடுகிறார்கள் நெட்டிசன்ஸ். இதில் ப்ளு டிக் வாங்கிய பிரபலங்களும், பல நிறுவனங்களின் ஹேண்டில்களும் அடக்கம் என்பதுதான் சர்ப்ரைஸ் ஷாக்.

நேற்று தனது ட்விட்டரில் டொனால்டு டிரம்ப் வழக்கம் போல அதிரடியாக ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தார்.

Sponsored


"தீயவைகளை நம் நாட்டில் இருந்து நாம் வெளியேற்ற வேண்டும்"

Sponsored


அவ்வளவுதான். ஒட்டுமொத்த ட்விட்டரும் அந்த ஒரு ட்வீட்டுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தது. 

"ஆமாம் பாஸ். அண்டார்டிகாவுக்கு ஒன் வே டிக்கெட் நான் வாங்கி தர்றேன். காசெல்லாம் வேணாம். ஆனா, நீங்க திரும்பி வந்துராதீங்க" என ஒருவர் ஆரம்பிக்க, 

"வேணாம் வேணாம்... பென்குவின்ஸ் பாவம்" என்றார் இன்னொருவர்.

"அங்க போனதும் ஒரு சுவர் கட்டுவாரு. பென்குவின்ஸ எல்லாம் போலார் கரடிகளோடு போங்கன்னு சொல்லிடுவார்" என்றார் இன்னொரு நெட்டிசன்.

அதன் பின் வரிசைகட்ட ஆரம்பித்தன டிரம்ப்பை கலாய்க்கும் பதில்கள்.

"தன்னைத்தானே நாட்டை விட்டு வெளியேற்றிய முதல் பிரதமர் நீங்கள் என வரலாறு சொல்லும்" என இம்சை அரசன் ரேஞ்சுக்கு இறங்கி அடித்தார்கள் இணையவாசிகள்.

இதன் உச்சமாக வைரல் ஆனது நாசாவின் ட்வீட் ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட்தான். நாசா  தனது விண்வெளி ஆய்வகம் பற்றிய அப்டேட்ஸ் தர ட்விட்டர் அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கியிருந்தது. அந்த அக்கவுண்ட்டில் இருந்து ட்ரம்புக்கு மென்ஷன் செய்து "மேல உங்களுக்கும் இடம் இருக்கு பாஸ். வாங்க" என சொன்னதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் உலவுகிறது. ஆனால், நாசா ட்விட்டர் பக்கத்தில் அந்த ட்வீட்டை காணவில்லை. இது நெட்டிசன் யாரோ ஒருவருடைய குசும்பு என்றும், "இல்ல இல்ல... நாசா ட்வீட் போட்டு டெலீட் பண்ணிடுச்சு" என்றும் சொல்லி வருகிறார்கள். 

ட்ரம்ப் ட்வீட் செய்த டைம், அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் இருக்கும் டைம் ஸ்டாம்ப்பை எல்லாம் வைத்து பார்க்கும்போது இது உண்மையான ட்வீட் ஆக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நாசா சொல்லாவிட்டாலும், அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பது போல தான் செயல்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர்.

-கார்க்கிபவாTrending Articles

Sponsored