சர்ச் இஞ்சின் க்ரியேட்டர்... ஆப்ஸ் டெவலப்பர்... டெக் டீச்சர்..12வயதில் இத்தனையுமா?Sponsored10 வயதுடைய சிறுவர்களுக்கு கம்ப்யூட்டரில் அதிகபட்சமாக தெரிந்த வேலை என்பது, பெரும்பாலும் பெயின்ட் செய்வது, பின் பால் கேம் விளையாடுவதாக இருக்கு. ஆனால் தன்னுடைய ஒன்பதாவது வயதில் உலகின் கேட்ஜட் தயாரிப்பில் முதல் நிறுவனமான ஆப்பிளுக்கு ஓர் ஆப்பை டிசைன் செய்தவர், டான்மி பக்‌ஷி.

கனடாவில் வாழும் இந்தியர்களான டான்மி குடும்பத்தினர் 2004-ஆம் ஆண்டு, அங்கே குடியமர்ந்தனர். டான்மியின் தந்தை புனீட் பக்‌ஷி ஒரு ட்ரக் கம்பெனியில் ஆண்ட்ராய்டு டெவலப்பராக வேலைசெய்து வருகிறார். 'ஐந்து வயதிலேயே டான்மி கம்ப்யூட்டரின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பான். எப்போதும் கம்யூட்டரை பற்றிய சிந்தனையும் ஆண்ட்ராய்டு டெவலிப்பிங்-கின் மீது கொண்ட ஈடுபாடும்தான் அவன் உலகின் மிக இளமையான ஆப் டெவலப்பராக காரணம்' என கண்கள் மிளிர்கிறார் டாம்னியின் தந்தை.

தன்னுடைய ஒன்பதாவது வயதில் வாய்ப்பாடு கணக்கை எளிமையாக, அதே சமயம் ஜாலியாக படிப்பதற்காக டான்மி ஒரு ஆப்பை உருவாக்கினார். இதை முதலில் பப்ளிஷ் செய்ய ஆப்பிள் நிறுவனம் முன்வரவில்லை. ஒரு சில நிராகரிப்புகளுக்குப் பிறகு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராண்டுடன் ஐ-யூஸர்களுக்காக அது வெளியிடப்பட்டது.

அதன் பின் கோட் ப்ரோக்ராமிங்கில் தன் முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்த டான்மிக்கு இப்போது இருக்கும் அனைத்து ப்ரோக்ராமிங் மொழிகளும் அத்துப்படி. கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள 'ஐ.பி.எம் டெவலப்பர் கனெக்ட்'டில் 'ஆஸ்க் டான்மி' எனும், தான் உருவாக்கிய உலகின் முதல் வெப் அடிப்படையிலான 'NLQA (Natural Question Answering System)'ன் 8 பாயின்ட்டுகள் கொண்ட வழிமுறைகளை IBM WATSON’S COGNITIVE CAPABLITIES-ன் அடிப்படையில் விளக்கியுள்ளார்.

Sponsored
இந்த 8 பாயின்ட் கொண்ட அடிப்படைகள் ஒரு நபர், நிறுவனம், ஓர் இடம் மற்றும் தேதிகளுக்கான கேள்விகளுக்கு மிகச் சரியான தகவலை மட்டுமே விடையாக தரும். மேலும் 'டான்மி டீச்சஸ்' எனும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆயிரக்கணக்கான சப்ஸ்க்ரைபர்-க்கு ஆண்ட்ராய்டு ப்ரோக்ராமிங் குறித்த வகுப்புகளையும் சந்தேகங்களையும் விளக்கி வருகிறார் டான்மி.

ப்ரோக்ராமிங் தவிர்த்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டுள்ள டான்மி, 'இன்னும் நிறைய ஆப்கள் உருவாக்க வேண்டும், நிறைய ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் உருவாக வேண்டும்' என்று கூறுகிறார்.

Sponsored


டான்மிக்கு கம்ப்யூட்டர் தாண்டியும் பல விஷயங்களில் ஈடுபாடு அதிகம். நண்பர்களோடு பைக்கிங் செல்வது, டேபிள் டென்னிஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும். இந்த இரண்டும் தனது புரோகிராமிங் மூளையை இன்னும் செம்மைப்படுத்துவதாக சொல்கிறார் டான்மி. எழுதுவதும் டான்மியின் திறமைகளில் ஒன்று. IOS ஆப்ஸ் உருவாக்கும் சிறுவயது டெவலப்பர்களுக்காக ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். ஹலோ ஸ்விஃப்ட் (Hello swift) என்ற அந்தப் புத்தகமும் ஹிட்.

தற்போது ஆப்பிள் ஐ-போன் இல்லாமல் ஐ-வாட்ச்சை உபயோகப்படுத்தக்கூடிய முயற்சியிலும், தன்னுடைய 'ஆஸ்க் டான்மி' எனும் தகவல் தேடும் சேர்ச் இன்ஜினில் நிறைய முன்னேற்றங்களை கொண்டுவர முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் டான்மி. 100%  துல்லியமான சேர்ச் இன்ஜினை கொண்டு வருவதும், வியாபாரங்களுக்கு கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இருந்து பெறுவதற்காக ஒரு ஆப் தயாரிப்பதும் தான் தன்னுடைய தற்போதைய ஆய்வு எனக் குறிப்பிட்டுள்ளார் டான்மி. 

பெஸ்ட் விஷஸ் ப்ரோ!


- எஸ்.எம்.கோமதி (மாணவப் பத்திரிகையாளர்)Trending Articles

Sponsored