பத்தாம் ஆண்டில் ஆப்பிள்... ஐஃபோனில் என்ன ஆச்சர்யம் காத்திருக்கிறது?Sponsoredஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள்  நிறைவு விழா இந்த வருடம் நடை பெறவுள்ளது. இதனையொட்டி இந்த வருடம் வெளியாகவிருக்கும் ஐஃபோன் 8, சென்ற வருடம் வெளியான ஐஃபோன் 7ஐ விட நிறைய சிறப்பம்சம்களை  கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்த்தனர் ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள். ஆப்பிளின் இவ்வருட வெளியீடு அவ்வாறு இருக்குமா? லீக் ஆன தகவல்களை வைத்து ஒரு அலசலை போடுவோம் வாருங்கள்.

என்ன தான் நிறைய சிறப்பம்சங்களை கொண்டு ஒரு ஸ்மார்ட் போன் வெளியானாலும், அவற்றின் செயல்திறனை நம் கண்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவது போனின் ஸ்க்ரீன் தான். இதனை கருத்தில் கொண்டு, ஆப்பிள் நிறுவனம் முதன் முறையாக வளைந்த OLED ஸ்க்ரீன் கொண்ட ஐஃபோனை வெளியிடவுள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், அதே தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போன்கள்  ஐஃபோன் வெளியாவதற்கு முன்னரே வெளியாகி இருக்கும்.

Sponsored


ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய பலம் Hardware-Software Optimization, அதாவது மென்பொருளுக்கு ஏற்றார் போல வன்பொருளை வடிவமைப்பது. இதனால் ஆப்பிள் நிறுவனம் மிகச்சிறந்த வன்பொருளை சிறிது தாமதமாக வெளியிட்டாலும், அந்நிறுவனம் செய்யும் optimization ஐஃபோனுக்கு ஒரு தனி மரியாதையை பெற்றுத் தரும்.

Sponsored


ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தவிருக்கும் OLED ஸ்க்ரீன் ஆனது, பிரகாசம் மற்றும் வண்ணங்களில் தெளிவு என நிறைய சிறப்பம்சங்களை கொண்டு வரவுள்ளது. முன் கூறியது போல, செப்டம்பர் மாதம் ஐஃபோன் 8 வெளியாகும் போது, கொஞ்சம் பழைய தொழில்நுட்பமாக இருந்தாலும், ஆப்பிள் பயன்பாட்டில் OLED ஸ்க்ரீன் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

ஐஃபோனுக்கு தேவையான ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், அந்நிறுவனமே அவைகளை தயாரிப்பது கடினம். எனவே, சந்தையில் இருக்கும் ஏதோ ஒரு சிறந்த ஸ்க்ரீன் தயாரிப்பாளரை ஆப்பிள் நாடி தான் ஆக வேண்டும். சந்தையில் ஐஃபோன் வெளியாகும் போது அந்த ஸ்க்ரீன் பழையதாக இருக்கும் என்பதற்கு இது மற்றொரு சான்று.

ஏப்ரல் மாதத்தில் சாம்சங் கேலெக்சி போனும், அக்டோபர் மாதத்தில் கூகுல் பிக்செல் ஃபோனும் வெளியாக இருக்கும் நிலையில், ஆப்பிள் ஐஃபோன் இவை இரண்டிற்கும் மிகுந்த போட்டியை அளிக்கும். என்ன தான் மூன்று ஃபோன்களிலும் ஸ்க்ரீன் அளவு, தடிமன் போன்றவை வேறுபட்டாலும், அவை பயன்படுத்தவிருக்கும் தொழில் நுட்பம் OLED தான். எனவே, வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஸ்க்ரீன் தனித்து தெரிய வேண்டும் என்றால், மேலும் சிறப்பம்சங்களை கொண்டு அது வெளி வர வேண்டும் என்பது நிதர்சனம். 

இத்தனை ஆண்டுகாலம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை அதிகம் பூர்த்தி செய்திருப்பது ஆப்பிள்தான். அதனால், இதையும் செய்யும் என்கிறார்கள் டெக் ஆர்வலர்கள்.

- ம. சக்கர ராஜன்,

மாணவப் பத்திரிகையாளர்Trending Articles

Sponsored