வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த எமோஜிக்களை கவனிச்சீங்களா? #WhatsappUpdateSponsoredப்போதும் அப்டேட்டாக இருப்பதில் வாட்ஸ்அப் கில்லாடி. அதனால்தான் எத்தனை இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் இருந்தாலும், இன்னும் வாட்ஸ்அப் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க பல கோடி பயனாளர்களை பெற்றுள்ள வாட்ஸ்அப், தனது யூசர்களை திருப்திப்படுத்த வீடியோ காலிங் வசதி, Gif அனுப்பும் வசதி, டேக் செய்யும் வசதி என அடிக்கடி பயனுள்ள பல வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. அதுபோல இந்த முறை வெளியிட்டுள்ள பீட்டா வெர்ஷனில், புதிதாக சில எமோஜிக்களை இணைத்துள்ளது. 

வாட்ஸ்அப்பில் gif ஃபைல்களை அனுப்பும் வசதி இருந்தாலும், சாட் செய்யும் போது ஃபேஸ்புக் மெசெஞ்சர் போல, gif படங்களை தேடி அனுப்பும் வசதி முன்னர் இல்லை. இந்தக் குறையை தீர்க்கும் வகையில் giphy மூலமாக, Gif கோப்புகளை தேடி அனுப்பும் வசதியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது வாட்ஸ்அப். இதன் உதவியுடன் சாட் செய்யும் போது, எளிதாக gif படங்களை அனுப்பலாம். எனவே தனியாக Gif ஃபைல்களை அப்லோட் செய்யும் அவசியம் இல்லாமல் போனது. தற்போது அடுத்ததாக ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு நௌகட்டில் மட்டுமே இருந்த சில எமோஜிக்களை வாட்ஸ்அப் பயனாளர்களும், பயன்படுத்தும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. 

Sponsored


Sponsored


புதிய எமோஜிக்கள்:

தற்போது வாட்ஸ்அப்பின் 2.17.44 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த எமோஜிக்கள், இதற்கு முன்னர் ஐ.ஓ.எஸ் 10.2 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 வெர்ஷனில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இனி இவற்றைப் பயன்படுத்த மேற்கண்டவைதான் தேவை என்பதில்லை. உங்கள் போனில் வாட்ஸ்அப் இருந்தாலே போதும். இந்த 'யுனிகோட் 9' எமோஜி வசதியினை பெற, நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா டெஸ்ட்டராக இருக்க வேண்டும். 

செல்ஃபி, பெண்களின் பணிகள், புது சைகைகள் என நிறைய புது எமோஜிக்களை இந்த முறை கொடுத்துள்ளது வாட்ஸ்அப். நீங்கள் பீட்டா டெஸ்ட்டராக பதிவு செய்துகொண்ட பின்பு, நீங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்தால் இந்த எமோஜிக்களை நீங்கள் பெறலாம். ஆனால் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் இவற்றை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பிலோ அல்லது அப்டேட் செய்யாத வாட்ஸ்அப் பயனாளருக்கோ இந்த புது எமோஜிக்களை நீங்கள் அனுப்பினால், அவர்களுக்கு இது சப்போர்ட் செய்யாது. எமோஜிகளுக்கு பதில், அவர்களுக்கு கட்டங்கள் மட்டுமே தோன்றும். புதிய வசதிகளை முதலில் பீட்டா வெர்ஷன் பயனாளர்களுக்கும், பின்பு அனைவருக்கும் கொடுப்பதுமே வழக்கம். அதன்படி இந்த வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வரலாம்.

பீட்டா பயனளாராக:

கூகுள் ப்ளேஸ்டோரில் வாட்ஸ்அப் பக்கத்திற்கு செல்லவும். அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “Became a beta tester” என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் கீழே இருக்கும் I’M IN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளராக மாறிடலாம். 

இந்த வசதிக்கான பீட்டா வெர்ஷன் : 2.17.44  

- ஞா.சுதாகர்.
 Trending Articles

Sponsored