மாஃபியா, மீம்ஸ், மன்னார்குடி, ஆங்க்ரி எமோஜி - இவை தான் சசிகலா ட்ரெண்ட்ஸ்! #VikatanExclusiveSponsoredகருணாநிதி, ஜெயலலிதாவால் செய்ய முடியாததை செய்துவிட்டார் சசிகலா என்கிறது புள்ளிவிவரங்கள். ஆம் கருணாநிதியும், ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் போராடி கட்சிக்காக உழைத்து, பேசி வாங்கிய தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் உறுப்பினர்களின் உதவியோடு வாங்கிவிட்டார் சசிகலா. 

நேற்று பன்னீர்செல்வம் முன்மொழிந்து அனைத்து எம்.எல்.ஏக்களின் உதவியோடு முதல்வராக சசிகலா பதவியேற்கவிருக்கிறார் என்றதும் இணையம் பற்றிக்கொண்டது. இணையதேடலில் வி.கே.சசிகலாவுக்கு எதிரான வாசகங்களும் சமூக வலைதளங்களில் ஆங்க்ரி எமோஜிகளை பறக்க விட்டன. சசிகலாவை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதற்கு சிறு உதாரணமானது இந்த ஆங்க்ரி எமோஜிக்கள்.

Sponsored


Sponsored


கூகுள் தேடலில் சசிகலாவின் பெயர் நேற்று பல இடங்களில் தேடப்பட்டுள்ளது. அதிகமாக பெருங்குளத்தூர், ஏகாத்தூர் மற்றும் திருவெறும்பூரில் தேடியுள்ளனர்.  இது தொடர்பாக தேடப்பட்ட தலைப்புகளில் மாஃபியா, மன்னார்குடி, போராட்டம், மீம்ஸ் ஆகியவையும், சசிகலாவுக்கு எதிராக தனது கருத்தை தைரியமாக ட்விட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பாடகி சோஃபியா அஷ்ரஃப் ஆகியோரும் ட்ரெண்டாகியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சசிகலாவை பற்றிய தேடல் வாக்கியங்களில் இந்த 10க்கு தான் டாப் 10 இடம்.

Sasikala CM Memes
sasikala natrajan husband
sasikala history
sasikala comedy
sasikala date of birth
mannargudi
sasikala natrajan profile
m.natarajan
#tnsayno2sasi
natarajan apollo hospitals

மொத்த இணையமும் சசிகலாவுக்கு எதிராக திரும்பி அதிருப்தி அலையை வீசியுள்ளன. அவர் எப்படி பதவி விலக முடியும், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு  என அதிர்வலைகளை ஏற்படுத்தினர் நெட்டிசன்கள். மேலும் தமிழ்நாட்டில் நேற்றைய ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் பெரும்பாலும் சசிகலா எதிர்ப்பலைகளால் நிறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் ட்ரம்ப், இந்திய அளவில் மோடி, ராகுல், கெஜ்ரிவால் ஆகியோரோடு சசிகலாவும் இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாவது மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள அதிருப்தியை பிரதிபலிக்கிறது. 

ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored