ப்ளாக்பெர்ரி போன்ஸ் இனி இந்தியாவில் தயாரிக்கப்படும்!சில நாட்களுக்கு முன்பு தான் ஆப்பிள் நிறுவனம் தனது போன்களை இந்தியாவில் தயாரிக்கும் எண்ணம் உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது ப்ராண்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க, டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் (Optiemus Infracom) நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், தனது போன்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் இன்ஃப்ராகாம் நிறுவனத்துக்கு உரிமை வழங்கியுள்ளது ப்ளாக்பெர்ரி. மேலும், ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது மென்பொருளை இன்ஃப்ராகாம் நிறுவனத்துக்கு தொடர்ந்து கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இன்ஃப்ராகாம் நிறுவனம், இந்தியா, இலங்கை, நேபால் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் ப்ளாக்பெர்ரி போன்களை விற்பனை செய்ய முடியும். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored