அம்புஜா சிமி - பிரபல ஃபேக் ஐ.டி is back!Sponsoredமூகக் கருத்துகளை விமர்சிக்கும், அரசியல், அரசியல்வாதிகள், கட்சிகளை விமர்சிக்கும் ஃபேக் ஐ.டிக்கள் சமூக வலைதளங்களில் அதிகம். அதுபோல ஒன்றுதான் இந்த ஐடியும். அம்புஜா சிமி, இந்த ஐடியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டரை லட்சம் பேர் பின்தொடரும் இந்த ஐடி ஃபேக் ஐடி என்று சில மாதங்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஐடியைப் பின்தொடர்ந்தவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக இந்த ஐடியில் இருந்து பதிவுகள் இன்று காலை வரத்துவங்கின. ஃபேக் ஐ.டியாகக் கூறப்படும் அம்புஜா  ''ஐ யம் பேக்'' சொல்லியிருக்கிறார்.

திரும்ப வந்ததுமே தன் பகடிகள் (சர்காஸ பதிவுகள்) மூலம் ரீ-என்ட்ரியைத் தந்தார் அம்புஜா. 

Sponsored


''முகநூலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை போக்கவே மீண்டும் வந்துள்ளேன்..''

Sponsored


''முகநூலுக்கு வருமாறு அன்பு சகோதரர் பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் வலியுறுத்தினார்..''

ஆனால் மீண்டும் கம்பேக் கொடுத்து பல அரசியல் விமர்சனங்களை முன் வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐடி வந்த வேகத்தில் திரும்பவும் காணாமல் போயுள்ளது. இந்த ஐ.டியின் கம்பேக்- எக்ஸிட் தான் நெட்டிசன் மத்தியில் இன்றைய ட்ரெண்டிங்.

ஃபேஸ்புக்கில் 2.7 லட்சம் ஃபாலோயர்ஸைக் கொண்ட அம்புஜா சிமி என்ற பெண் ஐ.டி மிகப் பிரபலம். இதைப் படிக்கும் உங்களில் பலர், ஃபேஸ்புக்கில் அம்புஜாவைப் பார்த்திருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன்புவரை இந்த ஐ.டி-யில் இருந்து ஏதாவது ஒரு பதிவு போட்டால் போதும், ‘சாட்டையடி பதிவு தோழி...’, ‘அருமையாகச் சொன்னீங்க’, ‘செம, நன்றி தோழி’ எனச் சில நிமிடங்களில் கமென்ட்களும், வாழ்த்துகளும் பறக்கும். போட்டோ, போட்ட அடுத்த நொடியிலேயே லைக்குகள் பிச்சுக்கும். ஆண்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அம்புஜா ஐ.டி டிசம்பர் முதல் முடக்கப்பட்டது...

ஃபேஸ்புக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண்ணின் புகைப்படத்துடன் இந்த ஐ.டி உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த அம்புஜா , கேரளாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதாக அந்த ஐ.டி சொல்கிறது. சமூக அக்கறைப் பதிவுகள்... இயற்கையை ரசிக்கும் பதிவுகள்... இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போட்டோ மாற்றுவது... என சமூக வலைதளத்தில் அம்புஜா செம ஆக்டிவ். இதனால் இந்த ஐ.டி., சில காலங்களிலேயே மிகப் பிரபலமானது. இதன் விளைவாக 5,000 நண்பர்களைத் தாண்டி, இந்த ஐ.டி-க்கு 2.7 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தனர். பின்தொடர்பாளர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆண்களே. இந்த ஐ.டி-யில் இருந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து... பல ஆண்கள், பல வருடங்களாக சாட் செய்து வந்துள்ளனர். தென்காசியைச் சொந்த ஊராகக் கொண்ட ஊடகவியலாளர் சிலருக்கு, இந்த ஐ.டி மீது அவ்வப்போது சந்தேகம் வந்துள்ளது. 

இந்த நிலையில், இது உண்மையான ஐ.டி-தான் எனக் காட்டுவதற்காக, அம்புஜா சிமியின் கணவர் என ரகுவரன் என்ற பெயரில் அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கியிருந்தனர். ‘எனது செல்ல மகள்...’ என ஒரு குழந்தையின் போட்டோவையும் போட்டு... அந்த ஐ.டி-யில், போஸ்ட் செய்துள்ளனர். அத்துடன், ‘எனது அலுவலக டீம், எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர்’ என மற்றவர்கள் நம்பும்விதமாக பல குரூப் போட்டோக்களையும் அதில் பதிவேற்றம் செய்திருந்தனர். சந்தேகம் கொண்டவர்கள், அந்த போட்டோக்களைப் பார்த்தபிறகு... அம்புஜா சிமி என்ற பெண் இருக்கிறார்போல என ஆணித்தரமாக நம்பியிருக்கின்றனர். இப்படி, கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஐ.டி ஃபேஸ்புக், ஆண்கள் மத்தியில் தனி ராஜ்ஜியம் நடத்திவந்திருக்கிறது.

இதனிடையே ஊடகவியலாளரான அருள்மொழி என்பவர், அம்புஜா சிமி வேலை பார்த்ததாகச் சொல்லப்படும் அந்தப் பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்திடமும், தென்காசியில் உள்ள நிருபர்களிடமும் விசாரித்துள்ளார். அப்போது, அம்புஜா சிமி என்ற பெண்ணே தங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதன்பிறகு, அந்த ஊடகவியலாளர்கள் தீவிரமாக விசாரித்தபோது... அம்புஜா சிமி என்பவர், பெண்ணே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அம்புஜா சிமி என்பது ஒரு ஃபேக் ஐ.டி. இது போலிக் கணக்கு என அவர்கள் புகார் தெரிவித்ததால்... அந்த ஐ.டி-யை முடக்கிவிட்டது ஃபேஸ்புக் நிர்வாகம். 

ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored