இன்று சசிகலா வீழ்த்திய 4 விஷயங்கள்! #GoogleTrendsSponsoredஇன்று மாலை பரப்பன அக்ரஹாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா..காலை முதலே இந்தியாவின் முக்கிய செய்தியாக இருந்து வந்தார். ஆனால் இன்று அதை விட முக்கிய நிகழ்வுகள் பல நடந்தன. அதையெல்லாம் மீறி சசிகலா டிரெண்ட் அடித்தது தான் இன்றைய வைரல். இன்று இந்தியாவின் நான்கு தெறி வைரல்களை ஓரங்கட்டினார் சசிகலா. அவரால் ட்ரெண்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட நான்கு விஷயங்கள் இவைதான்.

இஸ்ரோ

Sponsored


முதலாவது உலகமே திரும்பி பார்த்த விஷயம். இந்தியா உலக நாடுகளிலேயே முதல் முறையாக ஒரு ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி கெத்து காட்டியது இஸ்ரோ. இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை அனுப்பியதே சாதனையாக இருந்து வந்தது. இஸ்ரோவின் இந்த சாதனையை உலகமே புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விண்வெளித்துறை சர்வதேச தரத்துடன் ஒப்பிடப்படும் நிகழ்வாக இது அமைந்தது. நாசாவின் திட்டங்களை விட இதற்கு ஆன செலவு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sponsored


விராட் கோலி

விராட் கோலி தனது ஃபேஸ்புக்கில் 'நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான். உன்னால் எனக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் போலத்தான் தெரிகிறது.' என அவரும் அனுஷ்கா ஷர்மாவும் உள்ள புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். புகைப்படமும் செம வைரலானது. என்ன நினைத்தாரோ இந்திய கேப்டன், திடீரென்று அதை நீக்கிவிட்டார். இந்த விஷயம் இந்திய அளவில் காதல் ட்ரெண்டாக அமைந்தது. இருந்தாலும் கோலி இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவை எடுக்காததால் அங்கு ஹார்ட்டுகளை அள்ளி தெளித்தனர் ஃபேன்ஸ்.

ஸிவா

கோலி காதலியுடன் புகைப்படம் என்றால் தோனி குழந்தையுடன் வீடியோ. ஸிவாவுடன் பார்க்கில் விளையாடும் வீடியோவை வெளியிட்டார் தோனி...மில்லியன் பேபி வழக்கம் போல் மில்லியன் வியூஸ் வாங்கியது. ஸிவாவின் க்யூட் லுக்கிற்காக லவ் யூ சொன்னவர்கள் அதிகம் இன்றைய வைரலில் கோலிக்கு டஃப் கொடுத்தது ஸிவா தான்.

ஏமி ஜாக்ஸன்

இதெல்லாம் நம்ம ஊரு ஆட்கள் சரி.ஏமி ஜாக்ஸன் போன் ஹேக் ஆகிடுச்சுனு நியூஸ் வந்ததும் இணையம் பற்றிக்கொண்டது. போன்ல டேட்டாவ காணோம்னு தேடின ஏமிய விட அவர் போன்ல என்ன விஷயம் காணாம போச்சுனு தேடிருக்காங்க நம்ம ஆட்கள். 

இதெல்லாம் வைரல் தான். ஆனா இதையெல்லாம் ஓரங்கட்டி ட்ரெண்டான வைரல்கள் ஓங்கி அடித்து வீழ்த்தியுள்ளார் சசிகலா. ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த சென்றவர் ஓங்கி அடித்தார். ஏதோ முணுமுணுத்தார். இவை ஜிஃப், மீம்ஸ் என இணையத்தை ஆக்கிரமித்தன. பல போட்டோஷாப் எடிட்டிங்கும் ஆகி சசிகலா வைரலானார். சசிகலா இன்று காலை சபதம் செய்ததில் ஆரம்பித்து சிறை செல்லும் வரை ட்ரெண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் சசிகலாவை டெல்லி அதிகம் தேடியுள்ளது...வாட் ஏன் ஐடியா மோடிஜினு ட்விட்டும் பறந்துள்ளது. இது என்ன குறியீடோ?

இவ்வளவு ட்ரெண்டில் இருக்கும் சசிகலாதான் 2014 செப்டம்பர் 27ம் தேதி இதே வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது ட்ரெண்டில் இருந்தார் என்பது வரலாறு....

ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored