வீடியோ ஆட்டோப்ளே, செட்டிங் டேப்.. ஃபேஸ்புக் ஆப்பின் புது அப்டேட்ஸ் தெரியுமா?Sponsoredஃபேஸ்புக் எப்போதுமே அப்டேட்டுகளில் புதுமை காட்டும் ஒரு நிறுவனம். வழக்கமாக ஃபேஸ்புக் புதிய வசதிகளை பயனாளர்களுக்காக அறிமுகம் செய்கிறது என்றாலே, அது என்ன என்பது குறித்து அறிய ஆர்வம் ஏற்படும். அதேபோல் இந்த முறையும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு பயன்பாட்டாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் லைவ் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது ஃபேஸ்புக்.

ஏற்கெனவே வீடியோக்களுக்கு என புதிய டேப்பை டிசம்பரில் வெளியிட்டது ஃபேஸ்புக். இதன் மூலம் பயன்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வீடியோக்களை மட்டும் காண முடியும் என்ற வசதியை வழங்கியது. ஒரு சில இடங்களில் மட்டும் ஃபேஸ்புக் வீடியோக்களில் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதியை சோதித்து வருகிறது.

Sponsored


இந்நிலையில் தற்போது வரவுள்ள புது அப்டேட்டில் வீடியோக்களில் ஆட்டோப்ளே வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒருவரது செல்போன் சைலன்ட் மோடில் இருந்தால் வீடியோக்களும் சத்தமில்லாமல் ப்ளே ஆகும். ஆனால் அப்படியில்லை எனில் டைம்லைனில் நகரும் போதே சத்தத்துடன் வீடியோ ப்ளே ஆகும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இது சற்று ஏடாகூடமான வசதி தான் என்றாலும் விளம்பரங்களை சத்தம் இல்லாமல் பார்ப்பது அர்த்தமற்றது என்கிறது ஃபேஸ்புக். ஆட்டோ ப்ளே விஷயத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றாலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கையில் எடுத்துள்ளது ஃபேஸ்புக்.

Sponsored


அடுத்ததாக புதிய ஆப்பில் செட்டிங்ஸ் டேப் தனியாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் வீடியோக்களை வெர்ட்டிகிள் வீடியோக்களாக பதியும் வசதி தற்போது ஃபேஸ்புக்கில் சரியானதாக இல்லை. அதனை மேம்படுத்தி உள்ளதாகவும். யூ-ட்யூபில் இருப்பதை போல வீடியோ பார்த்துக்கொண்டே நியூஸ் ஃபீடில் நகரும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது

ஃபேஸ்புக் இந்த புதிய மாற்றங்களில் தெளிவான உத்தியை கையாண்டுள்ளது. இந்த வீடியோ அப்டேட்டுகள் மொபைல் ஆப்ஸுக்கானது மட்டுமே. டெஸ்க்டாப் மூலம் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. 41 சதவிகித வீடியோ விளம்பரங்கள் சரியாக பலனளிக்காததே இந்த புதிய முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அப்டேட்டில் வீடியோக்களை விரும்பாத பயன்பாட்டாளர்கள் எரிச்சலைடைவார்கள் என்பதற்காக அவ்வப்போது ஆப் பயன்படுத்துபவர்களிடன் சர்வே முறையை கையாளிகிறது. ஒருவருக்கு வீடியோ பதிவுகள் பிடிக்கவில்லை என தெரிவித்தால் அவரது டைம்லைனில் வீடியோக்களின் விகிதத்தை குறைத்து விடுகிறது ஃபேஸ்புக். புதிய அப்டேட்டுகள் இந்த மாத இறுதியில் பல இடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ இந்த ஃபேஸ்புக் அப்டேட்டுகல மார்க்குக்கு தான் வெளிச்சம்.

- ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored