மூன்றாம் ஆண்டில் மோட்டோ.. சலுகை விலையில் போன்கள்..!



இந்தியாவில் மோட்டோ தன் மூன்றாம் ஆண்டை துவங்குவதால், ஃபிளிப்கார்ட் தளத்தில் மோட்டரோலோ சாதனங்கள்  ஆஃபரில் விற்பனைசெய்யப்படுகின்றன. இதன்படி, மோட்டோ Z  பிளே ஸ்மார்ட்போன்கள் ரூ 2,000 வரையும்;  மோட்டோ ஜி டர்போ மற்றும் மோட்டோ M ஸ்மார்ட்போன்களுக்கு ரூ1,000 வரையும் விற்பனை விலையில் இருந்து குறைக்கப்பட்டு ஆன்லைன் நேரடி விற்பனையில் இடம்பெறுகின்றன. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதிரடி விலைகுறைப்பு என ஆஃபர்களை அடுக்கியுள்ளது மோட்டோ. இந்த தள்ளுபடி விற்பனை பிப்ரவரி 20 -ம் தேதியான நாளை மற்றும் பிப்ரவரி 21-ம் நாள் ஆகிய இரு தினங்களில்  மட்டுமே நடைபெறுகிறது.
  மேலும் இத்துடன் இன்டஸ்ன்ட் வங்கி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்கள், 10% சலுகை விலையில் மோட்டோ சாதனங்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored