350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!Sponsoredஇந்திய ரயில்களின் வேகம் மட்டும் டெக்னாலஜியால் அதிகமாகிக்கொண்டேபோனாலும், அவை சொன்ன நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவது வழக்கம்தான். இப்போது, டெக்னாலஜியின் அடுத்த பாய்ச்சலால் சீறப்போகிறது, இந்தியன் ரயில்வே.   இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இதையும் மற்ற ரயில் பாதைகளைப்போல அமைப்பார்கள்...  இதுல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா? இருக்கு பாஸ்..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில், கடலுக்கு அடியில் ஓடப்போகிறது என்பதுதான் சிறப்பு. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, கடலுக்கு அடியில் இந்த ட்ரெயினில் பயணம் செய்தால், ஒரு ‘வாவ்’ அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். டபுள் டெக் ட்ரெயினுக்கே க்யூல நின்னு போனவங்க பாஸ் நாம.

Sponsored


மும்பையில் இருந்து அகமதாபாத் இடையே  508 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த புல்லட் ரயில் பாதையில், 7 கி.மீ தூரம் ஆழ்கடலின் அடியில் அமையப்போகிறது. தானே மற்றும் விரார் நகரங்களுக்கு இடையே 21 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் பயிர்கள் பயிரிடப்படும் பாசனப்பரப்பு அதிகமாக இருப்பதால், அது பாதிப்படையாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுரங்கப்பாதையை வடிவமைத்துள்ளார்கள். இதுதான்  இந்த புராஜெக்ட்டில் பாராட்டப்படவேண்டிய அம்சம்.

Sponsored


இந்த ரயில், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால், இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவை 3 மணி நேரங்களில் எளிதாகக் கடக்கலாம். மேலும், இரண்டும் மெட்ரோ நகரங்கள் என்பதால், புல்லட் ரயில் போக்குவரத்து மேலும் பல வசதிகளை மேம்படுத்த உதவும். புல்லட் ரயிலால் பயண நேரம் வெகுவாகக் குறையும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, கடலின் அடியில் 70 அடி ஆழத்தில் உள்ள மண் படுகைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கிவிட்டன. 97,636 கோடி ரூபாய் செலவாகும் இந்தத் திட்டத்துக்கு, ஜப்பான் 81 சதவிகிதம் நிதி உதவி அளிப்பதோடு மட்டுமில்லாமல், ரயில் பாதை கட்டுமானம் மற்றும் இயக்கத்திலும் உதவி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நடைபெற்றுவரும் பரிசோதனைகள் முடிவடைந்ததும், ரயில் பாதை கட்டுமானத்தை வரும் 2018 -ம் ஆண்டில் தொடங்கி 2023- ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முன்னிலையில் இருப்பது, ஜப்பான் நாடுதான். அங்கு, 1964-ம் ஆண்டிலேயே அதிவேக ரயில்கள் ஓடத் துவங்கிவிட்டன. மேலும், கடலுக்கு அடியில் ரயில் பாதையை அமைப்பது என்பது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவர்களுக்கு அது பழக்கமான ஒன்றுதான். 1988-ம் ஆண்டே ஜப்பானின் ஹொன்சு மற்றும் ஹொக்கிடோ தீவுகளுக்கு இடையே 54 கி.மீ தூரத்துக்கு ஆழ்கடலின் அடியில் செல்லும் இரு வழி ரயில் பாதையை வடிவமைத்து, அதில் புல்லட் ரயில் ஓட்டியவர்கள் ஜப்பானியர்கள். எனவே, இந்தியாவின் புல்லட் ரயில் சகாப்தத்தையும் சிறப்பாகத் தொடங்கிவைப்பார்கள்.

அதற்கு முன்பாக, நம்ம பிரதமர் மோடிகிட்ட ஒரு கேள்வி. போன நவம்பர் மாசம் திடீர்னு ஒரு நாள் நைட் 500,1000  ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுனு சொல்லிட்டு, எங்கள பணம் எடுக்க ஊர் ஊரா சுத்தவிட்டுட்டு, நீங்க ஜப்பானுக்குப் போய் புல்லட் ரயில் ஓட்டுற மாதிரி போஸ் குடுத்தீங்களே... அது, இந்த ரயில இந்தியாவுக்குக் கொண்டு வர்றதுக்குத்தானா?
 

-மு.ராஜேஷ்
மாணவப் பத்திரிகையாளர்Trending Articles

Sponsored