Flipkart - ல் புதிய லெனோவோ Vibe K 5 நோட்



லெனோவா Vibe K 5 நோட், இன்று இரவு 11.59 மணிக்கு Flipkart - ல் அறிமுகமாகிறது. அதன் விலை 13,499 ரூபாய் ஆகும். ஏற்கெனவே, லெனோவில் பயனாளர்களை அதிக அளவில் கவர்ந்த, மற்றும் அதிகம் விற்பனையான  Vibe K 5 நோட்டில், புதிய அம்சங்களுடன் இந்த மாடல் வெளிவருகிறது.

Sponsored



பழைய  Vibe K 5 நோட்டில், 32 ஜிபி-யாக இருந்து, இன்டர்நல் ஸ்டோரேஜ், இதில் 64 ஜிபி-யாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் 4 ஜிபி ரேமைக் கொண்டுள்ளது. பின்புற கேமரா, 13 mega pixel ம், 8 mega pixel ம் கொண்டுள்ளது. புதிதாக அறிமுகமாகும்  Vibe K 5 நோட், 13,499 ரூபாய்க்கு Flipkart ல் கிடைக்கிறது. முந்தைய மாடல்  Vibe K 5 நோட், Flipkartல் 12,499 ரூபாயில் கிடைக்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜ் அளவை அதிகப்படுத்தியிருப்பதால், இதில் 7 மணி நேர அளவிற்கான வீடியோ பதிவுகளை ஏற்ற முடியும். லெனோவா பயனாளர்களிடம் இந்தப் புதிய மாடல் பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored