ஸ்கைப் லைட், ஆதார் எண் மூலம் பாதுகாப்பு... மைக்ரோசாப்ட்டின் இந்தியப் பாசம்..!Sponsoredமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இணைய வேகம் குறைவான பகுதிகளிலும் பயன்படுத்தும் விதமாக 'ஸ்கைப்' அப்ளிகேசனின் லைட் வெர்சனை அவர் வெளியிட்டார். இந்தியாவுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேசனை மும்பையில் நடந்த 'Future Decoded' நிகழ்ச்சியில் அவர் வெளியிட்டுப் பேசினார்.

ஸ்மார்ட்போன் விற்பனையின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆனால் இணைய சேவையைப் பொறுத்தவரை நாட்டின் பல இடங்களுக்கு 3ஜி சேவை கூட முழுமையான அளவுக்குச் சென்றடையவில்லை. இதை மனதில் கொண்டு ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைவான இணையதள வேகத்திலும் செயல்படும் அப்ளிகேசன்களை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


மிகக் குறைவான இணையதள வேகத்திலும் பயன்படுத்தலாம் :

Sponsored


ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்ய உதவும் 'ஸ்கைப்' அப்ளிகேசன் பொதுவாக அதிவேக இணையதள வேகம் இருக்குமிடத்தில் மட்டுமே சிறப்பாக செயல்படும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 13MB அளவு கொண்ட இந்த 'லைட்' வெர்சன் அப்ளிகேசன் மூலம் இனி, குறைவான இணையதள வேகம் கொண்ட இடங்களில் இருந்தும் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்ய முடியும். இந்த அப்ளிகேசன் மூலம் குறுந்தகவல்களைப் படிக்கவும், அனுப்பவும் கூட முடியும். இவை மட்டுமின்றி, இந்த அப்ளிகேசன் எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்துகிறது என்பதையும் பயனாளர்கள் கண்காணித்துக் கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் இருக்கும் சாட்-பாட்ஸ் மூலம் பயனர்களால் செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும். இந்த அப்ளிகேசன் தமிழ், தெலுங்கு உள்பட ஏழு இந்திய பிராந்திய மொழிகளிலும் செயல்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைவான இணையதள வேகம் கொண்ட இடங்களில் வீடியோ கால் செய்யும்போது, வீடியோவின் ரெசொல்யூசன் குறையும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தடையற்ற வீடியோ கால் செய்ய முடியும். மேலும் டேட்டாவும் குறைவாகவே பயன்படுத்தப்படும். வைஃபை மற்றும் மிகவேக இணையதள வேகம் கிடைக்கும்போது வீடியோவின் ரெசொல்யூசன் தானாக அதிகரித்துக் கொள்ளும்.

இதேபோல இணையவழி வேலை தேடுவோருக்குப் பயன்படும் 'லிங்க்ட் இன்' அப்ளிகேசனின் லைட் வெர்சனும் வெளியிடப்பட இருக்கிறது. பயனர்கள் பொதுவாகத் தங்களின் மொபைல் எண் மூலமாக சரிபார்க்கப்படுவார்கள். ஆனால் மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கும் இந்த இரு அப்ளிகேசன்களும் ஆதார் எண் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. 'ஸ்கைப் லைட்' அப்ளிகேசனில் ஆதார் மூலமாக சரிபார்க்கப்பட்ட பயனர்களுடன் மட்டும் வீடியோ கால் அல்லது சாட் செய்ய முடியும் என்பதால் இது பாதுகாப்பானதாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'லிங்க்ட் இன்' மூலமாக, நிறுவனங்கள் விண்ணப்பதாரர்கள் உடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இன்டர்வியூ செய்யும் நபர் வீடியோ கால் செய்யும்போது, விண்ணப்பதாரர் தனது 12 இலக்க ஆதார் எண்ணைத் தர வேண்டும். பின்னர் OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பப்பட்டு விண்ணப்பதாரர் சரிபார்க்கப்படுவார். இதனால் போலிகள் பற்றிய கவலை இனி வேண்டாம் என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மேலும் 'ப்ராஜக்ட் சங்கம்' என்ற எதிர்காலத் திட்டம் மூலம் மாணவர்கள் பயன்பெற முடியும் என சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்களில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களின் 'லிங்கட் இன்' கணக்குகளில் அதுபற்றிய தகவல்கள் பதியப்படும். மாணவர்களின் படிப்பு நிறைவு பெறும் தருவாயில், பயிற்சி விவரங்களும் பதிவேற்றப்படுவதால் மாணவர்களால் எளிதாக வேலை தேட முடியும் சந்தர்ப்பம் உருவாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.

அதிவேக இணையதள சேவையின் வளர்ச்சி அதிகரிக்கும் காலத்தில், ”இப்பலாம் யார் சார் போன்ல கால் பண்றா?” என்ற நிலை வரலாம்.

ஸ்கைப் லைட் வெர்சன் டவுன்லோடு லிங்க் :

- கருப்புTrending Articles

Sponsored