அட... இதுக்குலாமா கேட்ஜெட் கண்டுபிடிப்பாங்க? #WeirdGadgets



இது கேட்ஜெட்ஸ் காலம். பிரேக்ஃபாஸ்டுக்கு ஏதாவது கேட்ஜெட்டை சாப்பிடலாமான்னு யோசிக்கிற அளவுக்கு இந்தக் கால பசங்கள்ல இருந்து பல்லு போன தாத்தா வரைக்கும் யோசிச்சிட்டு இருக்காங்க. ஸ்மார்ட்போன்ல ஆரம்பிச்சு இப்ப ஸ்மார்ட் டாய்லெட் வரைக்கும் வீட்டுல இருக்கிற எல்லா பொருளுக்கும் ஒரு ஸ்மார்ட் கேட்ஜெட்டை பாத்திருப்போம். இருந்தாலும், நம்ம கற்பனையெல்லாம் காலி பண்ற மாதிரி நாம எதிர்பார்க்காத 361வது டிகிரில புதுசா சில கேட்ஜெட்டை ஜப்பானும், சைனாவும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துட்டே இருக்கு. அந்த கொடுமைகளை வரிசையா பார்க்கலாம் வாங்க.

1) செப்பல் ஓப்பனர்:

Sponsored


இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

Sponsored


அதேதான் பாஸ். எத்தனை இடத்துல தேடியிருப்போம்? கீ செயின்ல ஆரம்பிச்சு, பர்ஸ்ல வச்சுக்கிற வரைக்கும் குட்டி குட்டியா பாத்திருப்போம். யோசிச்சிருப்போம். ஆனா, இப்படி யார் கண்ணுலயும் படாத இடத்துல வைச்சிருக்கான் பாருங்க.. அதான் சைனாக்காரன்.

Sponsored


2) பேரு தெரியாத கேட்ஜெட்:

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

தண்ணில மிதந்துக்கிட்டே கோக் குடிச்சிருப்போம். ஆனா, சிப்ஸ் சாப்பிட்டிருப்போமா? ஆனா, அப்படி சாப்பிட்டாதான ஒரு டான் எஃபக்ட் கிடைக்கும்? மழை பெஞ்சாலே அம்மாக்கிட்ட பஜ்ஜி கேட்கிறவன் தமிழன். அவனை, தண்ணில ஊற வச்சிட்டு மொறுக் மொறுக்ன்னு கடிக்க ஒண்ணும் கொடுக்கலைன்னா எப்படி? அப்படி பஜ்ஜிகளையும், சிப்ஸ்களையும் போட்டு வைக்க ஒரு நல்ல கேட்ஜெட். இன்னும் பேரு வைக்கலைன்னா குற்றாளீஸ்வரன் கேட்ஜெட்ன்னு வச்சிக்கலாம்.

3) செல்ஃபி சீப்பு:

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.


போட்டோ எடுக்கிறாங்கன்னா உடனே சத்யராஜே கூட முதல்ல தலையை தான் சீவுவாரு. அப்படி இருக்கிறப்ப, சீப்புலயே செல்ஃபி கேமரா வைக்கலாம்னு முதல்ல நமக்குதான் தோணியிருக்கணும். ஆனா பாருங்க, இதையும் சைனாக்காரன் தான் கண்டுபுடிச்சிருக்கான். மூக்கு சிறுசா இருந்தாலும் இப்படிலாம் தோணும் பாஸ்ன்னு வடிவேலுக்கிட்ட சொல்லணும்.

4) பறக்கும் அலாரம்:

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

அலாரம கண்டுபுடிச்சவன் டெக்னாலஜி தெரிஞ்சவன்.அதுக்கு ஸ்னூஸ் கண்டுபிடிச்சவன் சைக்காலஜி தெரிஞ்சவன். இத கண்டுபிடிச்சவன் அதையும் தாண்டியவன். 7 மணிக்கு அலாரம் அடிச்சா மேல இருக்கிற சக்கரம் பறக்க ஆரம்பிச்சிடும். அதை தேடி பிடிச்சு, வச்சாதான் அலாரம் ஆஃப் ஆகும். அதுக்குள்ள நம்ம தூக்கம் பறந்து போயிடும். 

5) ஃபேன் வச்ச சட்டை:

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.


ஒரு சென்னைவாசியா நான் கைவிடப்பட்டதா உணர்ந்த தருணம்ன்னே சொல்லலாம். டிசம்பர் மாசத்துல கூட வேர்த்து கொட்டியபடிதான் ஆஃபீஸ்க்கு போவோம். அப்ப நாமதான இந்த ஃபேன் சட்டையை கண்டுபிடிச்சிருக்கணும். போறாங்க. கண்டுபிடிச்சது அவங்களா இருக்கலாம். ஆனா, ஃபேன் சட்டைக்கு அதிக ஃபேன்ஸ் நம்ம சென்னைலதான் இருப்பாங்க.

6) நூடுல்ஸ் ஃபேன்

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

எத்தனை தடவை சூப்பை சூடா குடிச்சு நாக்க புண்ணாக்கியிருப்போம்? அப்படி ஒரு சூடுப்பட்ட விஞ்ஞானிதான் இதை கண்டுபுடிச்சிருப்பான். புண்பட்ட நாக்க ஃபேன் விட்டு ஆத்த முடியுமா? அதான் நூடுல்ஸ ஆத்திக்கிறாங்க.

7) குடை “டை”

இதெல்லாம் வேற லெவல். வீணா கிடக்கிற இடத்தை சரியா யூஸ் பண்றதுல ஜப்பானை அடிச்சிக்க முடியாது. அமிதாப்பச்சன் மட்டும் ஜப்பான் போனாருன்னா, அவருக்கு காலுக்கு நடுவுல ஆட்டோவை ஓட்டுவான் டோக்கியாக்காரன். அதனாலதான் டைக்குள்ள குடையை வச்சிருக்கான். ஆனா, ஒண்ணு ஜப்பான்.. கு’டை’க்குள்ள “டை” வச்சது தமிழ்தான். டோண்ட் ஃபர்கட்.

இன்னும் நிறைய கண்டுபுடிச்சிருக்காங்க. அதையெல்லாம் இங்கே பார்க்கலாம்.

-கார்க்கிபவா



Trending Articles

Sponsored