கேமரா மூலம் இதயத்துடிப்பை அளவிடலாம் - பானசோனிக் அறிமுகம்!Sponsoredதொழில்நுட்ப வளர்ச்சியால், ஒருவரது இதயத்துடிப்பை ஸ்மார்ட்ஃபோன், ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே அறிந்துகொள்ளும் வசதிகள் வந்துவிட்டன. பானசோனிக் நிறுவனம் தற்போது, கேமரா மூலமாகவே இதயத்துடிப்பை அளவிடும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் பாயும்போது, தோல் எதிரொலிக்கும் ஒளியில் ஏற்படும் மாற்றத்தைவைத்து, இதயத்துடிப்பைக் கணக்கிட முடியும் என பானசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு, 'கான்டக்ட்லெஸ் வைடல் சென்சிங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்பம் மூலமாக விளையாட்டு வீரர்களின் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை நேயர்கள் தெரிந்துகொள்ள முடியும். மேலும், அலுவலகத்தில், ஊழியர்களின் மன அழுத்தத்தைக்கூட கண்காணிக்க முடியும். இதுபோன்று, பல வழிகளில் இந்தத் தொழில்நுட்பம் பயனளிக்கும் என பானசோனிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored