மொபைல் உலகின் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இவைதாம்..!Sponsoredஉங்களுக்குப் பிடிச்ச மொபைல்போன் எது எனக் கேட்டால், பலரும் பலவிதமான மாடல்களைச் சொல்வோம். அதில் 80 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட மாடலைத்தான் சொல்வார்கள். அப்படி, அதிரி புதிரி ஹிட் அடித்த மாடல்கள் கொஞ்சமே. அவைதாம் நம்முடைய ஐகானிக் மொபைல்போன்கள்.


1. நோக்கியா 3310 :

Sponsored


இந்தியாவில் மொபைல்போன்கள் அறிமுகமானபோது, பரவலாக அதிகப்பேரிடம் இருந்த மொபைல் இதுவாகதான் இருக்கும். மொபைல் என்றாலே ஒரு காலத்தில் அனைவரும் நோக்கியா 3310 மாடலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 3210 என்ற இரண்டு மொபைல் மாடல்கள் தான் நோக்கியா நிறுவனத்தையே மொபைல்களில் ராஜாவாக உருவாக்கியது. இதன் தோற்றம் செங்கல்லைப் போன்று கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், பேட்டரி லைஃப் ரொம்ப நாட்களுக்குத் தாங்கும். நோக்கியா 3310 தான் மொபைல் இண்டஸ்ட்ரியையே முற்றிலும் புரட்டிப்போட்டது எனில், அது மிகையாகாது. இந்த மொபைல் ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக, நோக்கியா நிறுவனம் நோக்கியா 3310 மாடலை ஸ்மார்ட் போனாக மாற்றி, சமீபத்தில் அறிவித்தது.

Sponsored


2. மோட்டோ RAZR V3 :

நோக்கியா எப்படி 3310 மாடலால் வளர்ச்சியடைந்ததோ அது போலத்தான், மோட்டோரோலா நிறுவனத்துக்கு மோட்டோ RAZR V3 மாடல். செங்கல் போன்ற தோற்றம்கொண்ட நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 3210 மாடல்களுடன் ஒப்பிடுகையில் மோட்டோ ’அல்ட்ரா ஸ்லிம்’ என்றுதான் சொல்ல வேண்டும். இதன் ஸ்லிம் வடிவமைப்பு மொபைல் பயனர்களை கவர்ச்சியான மொபைலாகக் கருதவைத்தது. இதன் காரணமாகவே, இந்த மாடல் அதிவேகமாக பிரபலமடைந்தது.

3. நோக்கியா N95 :

நல்ல வடிவமைப்பைத் தன்னிடத்தே கொண்டதுதான் இந்த நோக்கியா N95 மாடல். ஸ்மார்ட் போன் துறை என்பது முற்றிலும் வேறுபட்டது. ஆனால், இந்த N95 மாடல்தான், ஸ்மார்ட் ஃபோனுக்கான ஓர் அடையாளமாக முதன்முதலில் அங்கம்வகித்தது.

இந்த மாடலை ஐகானிக் லிஸ்ட்டில் சேர்த்ததுக்கு ஒரேயொரு காரணம்தான் உள்ளது. கேமரா மாடல்களுக்கு அடிக்கோடிட்டதே இந்த மாடல்தான் என்பதுதான் அந்தக் காரணம்.

4. ஆப்பிள் ஐபோன் 3G :

ஐபோன் எப்படி ஐகானிக் மொபைல் பட்டியலில் வரும் என நீங்கள் நினைக்கலாம். இருப்பினும் மற்ற ஐபோன்களின் அம்சங்கள் இதில் குறைவுதான் என்பதால், இந்த மாடலைத் தாரளமாக லிஸ்ட்டில் சேர்க்கலாம். மிக நேர்த்தியான அப்ளிகேஷன்களை உள்ளடக்கியுள்ளது இந்த மாடல். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் இதன் ஆப் ஸ்டோர் வெளியிடப்பட்டு 552 ஆப்களை வழங்கியது. 2009 ஜனவரி வரையில் ஒரு பில்லியன் அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டது. பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில், 2 பில்லியன் அளவில் ஆப் ஸ்டோரில் அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டச்-ஃப்ரெண்ட்லி ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம்செய்த முதல் ஐபோன் இதுவே!

5. T-மொபைல் G1 :

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டிபோடும் விதமாக, ஹெச்.டி.சி (HTC) T-மொபைல் G1 என்ற முதல் அசலான ஆன்ட்ராய்டு ஹேண்ட்செட்டை உருவாக்கியது. இப்பொழுது ஸ்மார்ட் போன் உலகையே ஹெச்.டி.சி நிறுவனம் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

பயனாளர்கள் விரும்புவதை எளிமையாக உருவாக்கித்தருவதில் நாட்டம் செலுத்துவதாலேயே இந்த மாடல் பிரபலமானது எனச் சொல்லலாம்.

6. சாம்சங் கேலக்ஸி நோட்:

ஆசியர்களின் பங்கீடுதான் நோக்கியா மற்றும் மோட்டோரோலோவின் உருவமைப்பையே மாற்றியமைத்தது. அதேபோல, இந்த சாம்சங் கேலக்ஸி நோட் இன்றளவிலும் பிரபலமாக இருப்பதற்கு இதன் டிஸ்ப்ளே அளவே காரணம். ஏனெனில், இதற்கு முன்னர் வந்த 5.5 இன்ச் அளவானது, ‘இதை எப்படிப் பயன்படுத்துறது’ என அனைவராலும் ஏளனம் செய்யப்பட்டது. பயனாளர்கள் விரும்புவதை எளிமையாக வழங்குவதை முக்கியமாகக்கொண்டுள்ளதால், சாம்சங் மாடல்களுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

7. சாம்சங் கேலக்ஸி SII :

பெரிய அளவிலான ஸ்க்ரீன் கொண்டதென்றாலும் சாம்சங் கேலக்ஸி SII மாடலுக்கு இப்போதும் வரவேற்பு உள்ளது. மிகவும் ஸ்லிம்மாகவும் செயல்வேகம் மிக்கதாகவும் இருப்பதால், இதை ஐபோனுக்கு இணையாக பார்க்கிறார்கள்.
சாம்சங் நிறுவனத்தின் மாடல்களைப் பொறுத்தவரை மிகப் பிரபலமடைந்துள்ள இந்த SII, அடுத்து வரப்போகும் S6 மாடலைவிடவும் ட்ரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. மோட்டோ G :

மார்கெட்டையே சாம்சங் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தபோது,  மோட்டோரோலோ பல புதுமைகளை வெளியிட்டது. அந்த நிறுவனத்தின் V3 மாடலின் வீழ்ச்சிக்குப் பிறகு, மோட்டோ G மூலம் மொபைல் சந்தையில் மோட்டோரோலோ புத்துயிர்பெற்றது. இதன் அற்புதமான தோற்றம், விருப்பத்துக்கு ஏற்ப கழற்றி மாற்றக்கூடிய கவர் போன்றவை, மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியைக்கொடுத்தது.

9. சாம்சங் கேலக்ஸி நோட் 4 :

’என்ன கேமராடா இது!’ என சாம்சங் கேலக்ஸி நோட் 4 மாடல் பயனாளர்களை ‘வாவ்’ போடவைத்தது. இதற்கு முந்தைய மாடலான கேலக்ஸி நோட் 3 அவ்வளவாக கவராவிட்டாலும், நோட் 4 அந்தக் குறைகளை எல்லாம் நிவர்த்திசெய்தது. அடுத்த வருடம் நோட் 5 மாடலை சாம்சங் அறிமுகம்செய்தாலும்கூட, நோட் 4 விற்பனை கொஞ்சமும் பாதிக்காது.

உங்களுக்குப் பிடிச்ச மொபைல் மாடல் எதுன்னு கமென்ட்ல சொல்லுங்க பாஸ்!

- பா.பிரியதர்ஷினி  (மாணவப் பத்திரிகையாளர்)Trending Articles

Sponsored