வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் பொருட்கள் ஹேக்கர்களின் நண்பர்களாக மாறலாம்... உஷார்! #PreventHackingSponsored”நம்முடைய வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் குளிர்சாதனப் பெட்டிகளும், ஸ்மார்ட் டி.வி. களும்கூட நமக்கு எதிரிகளாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்”  சாகெட் மோடி லூசிடெஸ் டெக் நிறுவனத்தின் சி.இ.ஒ.

இதற்குப் பயன்படும் பாட்நெட் பற்றியும்  மற்றும் எப்படி இந்த பாட்நெட்களைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல்கள் திருடப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

Sponsored


மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் பாட்வேர் மற்றும் மால்வேர் கண்காணிப்பு அமைப்பை இந்தியாவில் தொடங்கியது. நாட்டின் இணையப் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Sponsored


சமீபத்தில் இந்த ஹேக்கர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏ.டி.எம். வழியாக வங்கிகளில் கொள்ளைகளை இந்த ஹேக்கர்கள் அவ்வப்போது நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

டொமஸ்டிக் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவானது (Domestic Computer Emergency Response Team) சைபர் ஸ்வச்சதா கேந்த்ரா (Cyber Swachhata Kendra) என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் பிரத்தியேகப் பணியானது இணையத்தில் உள்ள இந்த பாட்களைக் கண்காணிப்பதும் மேலும் இதனால் பாதிப்படைந்த பொருட்களைத் தூய்மைப்படுத்த தக்க செயலிகளை வழங்குவதுமேயாகும்.

சரி வாங்க பாட்நெட் பற்றி தெரிஞ்சுக்கலாம் !

இந்த வார்த்தையை இரண்டாகப் பிரிக்கலாம். அப்படி பார்க்கும் போது பாட் என்பது ரோபோவையும் நெட் என்பது இணையத்தையும் குறிக்கிறது.

எப்படி ரோபோ தானாக இயங்கக் கூடிய பொருளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்த பாட்நெட்களும். ஆனால் இவை இணையத்தின் உதவியால் இயங்கக்கூடிய ஒன்றாகும். இவைகள் இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் குளிர்சாதனப் பெட்டி முதல் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை தனது தடத்தைப் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த இணைய தாக்குதல்கள்

சமீபத்தில் நடந்த MIRAI அட்டாக் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதா? அமேசான், டிவிட்டர், சி.என்.என், என்.ஒய்.டி இவற்றின் இணையதளங்கெல்லாம் டி.என்.எஸ் சர்வரில் தாக்கம் ஏற்பட்டதால்  முடங்கின.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி  என்னவெனில்  பாட்நெட்டின் 20 சதவீத ஆற்றல் மட்டுமே இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. என்ன வெறும் 20 சதவீதத்துக்கே இப்படியான்னு யோசிக்கிறிங்களா? அப்போ 100 சதவீத ஆற்றலும் பயன்படுத்தித் தாக்குதல் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்?

இன்னும் உங்களுக்கு தெளிவா புரியலையா?

அடிப்படையில் இது ஒரு கணினி புரோகிராம். தானாக எந்த ஒரு ஸ்மார்ட் டிவைஸ்களிலும் இயங்கக்கூடிய வகையில் ஹேக்கர்களால் வடிவமைக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இது இயங்குகிறது. ஹேக்கர்கள் தங்களுக்குத் தேவையான நேரங்களில் புரோகிராமை மாற்றி இதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இணையத்தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

சமீபமாக பாட்நெட்களைப் பயன்படுத்தி நடைபெறும் இந்த இணையத் தாக்குதல்கள் டி.டி.ஒ.எஸ். (Distributed Detail of Service) என அழைக்கப்படுகின்றன. அதாவது நாட்டின் பல ஐ.பி. முகவரிகளுடன் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டு அங்கிருந்து தாக்குதலை நடத்த பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல் போன்ற பொருட்களில் மிக எளிதாக ஊடுருவி நம் அனுமதியின்றி நம்முடைய நெருக்கமான புகைப்படங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை நமக்குத் தெரியாமலே ஹேக் பண்ணும் அளவிற்கு திறமையோடு இந்த பாட்நெட்கள் ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

பாட்நெட் மற்றும் மால்வேர் கண்காணிப்பின் முக்கியத்துவம்

இன்று உலகம் முழுவதும்  பாட்நெட்டின் தாக்கம் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. மொத்தம் 4 நாடுகளில் மட்டுமே இதன் தாக்கத்தைக் கண்டறிவதற்கான மையங்கள் உள்ளன. சைபர் ஸ்வச்சதா கேந்த்ரா இந்த வரிசையில் மிகப் பெரிய பங்கினை வகிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே. இந்தியா 250 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளர்களையும், 50 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்களையும் கொண்ட மிகப்பெரிய நாடு. இந்த மையங்கள் பாட்நெட் தாக்கத்தினைக் கண்டறிந்து அதை கிளீன் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும். விரைவில் இந்த முயற்சியானது உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் முறைப்படுத்தப்படும்.

USB Pratirodh, AppSamvid மற்றும் MKavach போன்ற செயலிகள் இலவசமாக இணையதளத்தில் கிடைக்கின்றன இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய ஸ்மார்ட் சாதனங்களின் பாட்களை கிளீன் செய்ய முடியும்.

AppSamvid இது விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமே இயங்கக் கூடிய ஒரு செயலியாகும். இதன் கட்டுப்பாட்டில் அனைத்து செயலிகளையும் இயக்கும் ஆதலால் பிரச்னைகள் எளிதில் ஏற்பட வாய்ப்பில்லை.

USB Pratirodh செயலியானது USB வழியாக எந்த ஒரு வைரஸும் வராமல் தடுக்கிறது.

MKavach செயலியானது ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பாதுகாக்க உதவுகிறது. புளுடூத், வைஃபை, கேமரா போன்றவற்றுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .        

டிஜிட்டல் உலகம் நமக்குத் தரும் அத்தனை வாய்ப்புகளையும், எதிர்மறை ஆட்களுக்கும் தந்திருக்கிறது. அதை முறியடிப்பதுதான் முழுமையான தொழில்நுட்பமாக இருக்க முடியும்.

- மு. முருகன்  (மாணவப் பத்திரிக்கையாளர்)Trending Articles

Sponsored