லேப்டாப் கேமராவை மூடி வைக்க மறந்தால் என்ன ஆகும் தெரியுமா? #BewareOfHackingSponsoredஉங்க லேப்டாப்புக்கு ஸ்க்ரீன் கவர் வாங்கும்போது கேமராவ க்ளோஸ் பண்ணிக்குற மாதிரி ஒரு இடம் கொடுத்துருப்பாங்க. அது எதுக்குனு யாராவது யோசிச்சிருக்கீங்களா? அதை க்ளோஸ் பண்ணாம இருந்தா உங்கள ஒரு பெரிய ஆபத்து தாக்கும் அபாயம் இருக்கு, நீங்க பிசினெஸ் மீட்டிங்குல என்ன பண்ணுறீங்க, உங்க வீட்டு ஹால் எப்படி இருக்கும், உங்க பெட்ரூம்ல  லேப்டாப் யூஸ் பண்ணா உங்க பெட்ரூம் எப்படி இருக்கும்ங்கிறது வரைக்கும் வெளில இருந்து ஒருத்தரால கண்காணிக்க முடியும். இதுக்கெல்லாம் காரணம் இந்த லேப்டாப் ஸ்க்ரீன் மூலமா கேமராவ மூடாதது தான்.

ஆமாம், இந்த கேமராக்கள் மூலமா உங்கள கண்காணிக்க முடியும். உங்களது ஒவ்வொரு செயலையும் ஹேக்கர்கள் வீடியோ மூலம் கண்காணிக்க எளிய வழி உங்களது வெப் கேமராவை ஹேக் செய்வது தான். அப்படி செய்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களது நடவடிக்கைகளை அவர்களால் எளிதாக வீடியோவாகவே பதிவு செய்ய முடியும். அதேபோல் உங்களது லேப்டாப்பின் மைக் ஜாக்கையும் மூடி வைப்பது உங்களது உரையாடல்களை மற்றவர்கள் கேட்காமல் இருக்க உதவும். இல்லையெனில்  உங்களது பர்சனல்களைப் பார்க்க, கேட்க  நீங்களே வழி அமைத்து தருவதற்கு சமம். 

Sponsored


ஒரு சின்ன விஷயம் இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக லேப்டாப் கேமராவ மூடாம இருக்கறதெல்லாம் ஒரு பிரச்னையா என நினைக்காதீர்கள். இந்தியாவில் குறிப்பாக கல்லூரி படிக்கும் மாணவ/ மாணவிகளை குறி வைத்து நடக்கும் ஹேக்கிங் தான் அதிகம். அவர்களது பிரைவேட் வீடியோக்கள், புகைப்படங்களை எடுக்கும் நோக்கில் சில குழுக்கள் செயல்படுகின்றன. அவர்களிடம் இப்படி கேமரா மூலம் சிக்கினால் ஆபத்துகள் அதிகம்.

Sponsored


இதனை பெரிய டெக் நிறுவன மேலதிகாரிகள் சரியாக பின்பற்றுகிறார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் 500 மில்லியன் பயன்பாட்டாளர்களை கடந்துவிட்டது என்ற தகவலை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது லேப்டாப் இருந்தது. அதன் கேமரா மற்றும் மைக் ஜாக் கவனமாக மூடப்பட்டிருந்தது. அவரைப்போன்ற பிரபலங்களின் கணினியை ஹேக் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் ஹேக்கர்களிடம் தப்பிக்க பல பாதுகாப்புகளை மேற்கொண்டாலும் இதையும் கவனமாக கையாள்கிறார் மார்க். அமெரிக்காவின் FBIயும் கூட பயன்படுத்தாத நேரங்களில் கேமராவை மூடி வைக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது.

இதுபோன்ற எளிய விஷயங்களை கவனமாக கையாண்டால் நம் பிரைவஸி பாதுகாக்கப்படும், லேப்டாப்பில் நீங்கள் செய்யும் ஒரு சிறிய வேலை உங்களது பர்சனல் பக்கத்தை வெளிக்காட்டாமல் இருக்க உதவுகிறது என்றால் நல்ல விஷயம் தானே. 

உங்கள் லேப்டாப் பாதுகாப்பாக இருக்கிறதா?

காலைல கண்ணு முழிச்ச உடனே லேப்டாப் ஆன் பண்ணி அலுவலக வேலையோ? ஃபேஸ்புக்கோ ஆன் பண்ணி உட்காரும் ஆளா நீங்க? ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் எங்க இருந்தாலும் வேலைன்னு வந்துடுச்சுனா உடனே லேப்டாப்பை ஆன் பண்ணி வேலைய முடிக்குற ஆளா நீங்க?. உங்க லேப்டாப் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும்.. அதிலிருந்து பாதுகாக்க‌ என்ன வழி இருக்குனு தெரியுமா? ஜி.பி.எஸ். சிஸ்டம்ஸை சேர்ந்த நாகேந்திரனிடம் கேட்டோம்..

1. உங்கள் லேப்டாப்பை அடிக்கடி வெப்பநிலை மாற்றத்துக்கு உட்படுத்தாதீர்கள். உதாரணமாக குளிர்காலத்தில் வெளியில் இருந்து வீட்டுக்குள்ளோ அல்லது அலுவலகத்துக்குளோ வருகிறீர்கள் என்றால் உடனடியாக லேப்டாப்பை ஆன் செய்யாதீர்கள். லேப்டாப் அறை வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருங்கள். அதற்காக செயற்கையாக வெப்பத்தை அதிகரிக்கும் பணிகளிலும் ஈடுபடாதீர்கள். இது உங்கள் ஹார்ட்வேர், திரை இரண்டையுமே பாதிக்கும். அதனால் லேப்டாப் அறை வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருந்து ஆன் செய்யுங்கள்.

மேலும் 9 டிப்ஸ்களுக்கு க்ளிக் செய்க 

- ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored