இணையத்தில் கசிந்த சாம்சங் S8 புகைப்படம்சாம்சங்கின் கம்-பேக் போனாக, ஸ்மார்ட் போன் சந்தையில் கூறப்படுவது 'சாம்சங் கேலக்ஸி S8'. சாம்சங் நிறுவனம், தனது 'நோட் 7' போன்கள், பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்தது என்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கு இருந்த இடத்தை மற்ற நிறுவனங்களிடம் இழந்தது. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி 'சாம்சங் கேலக்ஸி S8' போனை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறது சாம்சங். ஏற்கெனவே S8 போனை பற்றிய பல தகவல்களும் யூகங்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது S8-ன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. சாம்சங், தான் விட்ட மார்க்கெட்டை பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored