தினம் எவ்வளவு நேரம்... மாதம் எத்தனை ஜிபி... மொபைலும் நாமும்..! #Infographics #MobileManiaSponsoredதினசரி காலை எழுந்ததும், மொபைல் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? உங்களைப்போலவே உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 100ல் 50 பேர் காலை எழுந்ததும் ஸ்மார்ட் போனைத்தான் பார்க்கிறார்கள். இந்த எண்ணிக்கை, இணைய ஊடுறுவலைப் பொறுத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேல் 4ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2020ல் 2.6 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் தினசரி இணையம் பயன்படுத்துபவர்கள், 3 பில்லியனுக்கும் மேல் உள்ளனர். அதில், 80 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் மூலமாகத்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தனிமனிதனாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரின் தகவல்களைப் பார்த்தால், ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

Sponsored


ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர், ஒரு நாளைக்கு 1.8 மணி நேரம் சராசரியாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார். அதில், ஆப்ஸ்களில் 89 சதவிகித நேரத்தையும், ப்ரெளசர்களில் 9 சதவிகித நேரத்தையும், மற்ற விஷயங்களில் 2 சதவிகித நேரத்தையும் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு சராசரியாக 46 முறை ஸ்மார்ட்போனை ஆன் செய்து செக் செய்கிறார். உலக அளவில் பார்த்தால், ஒரு நாளைக்கு 8 பில்லியன் முறை ஸ்மார்ட் போன்கள் ஆன் செய்து செக் செய்யப்படுகிறது. மேலும், சராசரியாக ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர், மாதத்துக்கு 2.9 ஜி.பி டேட்டாவைப் பயனபடுத்துகிறார். இது, தொழில்நுட்ப ரீதியாக 2ஜி, 3ஜி, 4ஜி என்ற அளவில் வேறுபட்டிருந்தாலும், இந்த அளவு பிரமிக்கவைப்பதாகவே உள்ளது. மேலும் 4ஜி இணைப்புகள் அதிகமாகும்போது இந்த எண்ணிக்கை கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Sponsored


இன்று எல்லாவற்றுக்குமே செல்போன்கள் என்று ஆகிவிட்ட நிலையில், அலுவலக வேலைகள்கூட செல்போனுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. 2018-ம் ஆண்டில் அனுப்பப்படும் 10 இ-மெயில்களில் 8, மொபைல்மூலம் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆப்ஸ்களும், இணைய சேவை வசதிகளும் எளிமையான முறையில் ஸ்மார்ட்போன்களில் புகுத்தப்பட்டதுதான். 2016-ம் ஆண்டு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 90 பில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களும், ஆப்பிள் ஸ்டோரில் 13 பில்லியன் ஐஓஎஸ் ஆப்ஸ்களும் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டில் மட்டும் 900 பில்லியன் மணி நேரம் ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 37,500 கோடி மணி நேரம் அல்லது 10 கோடி வருடத்துக்கு இணையாக, உலகம் முழுவதும் ஆப்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

நாம், பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் மொபைல் துவங்கி, பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கும் மொபைல் வரை இந்தியாவில் வர்த்தகமாகும் இந்த ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட்  என்பது, 20 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இது, இந்திய ஜிடிபி-யில் 0.9 சதவிகிதமாக உள்ளது. உலகம் முழுவது இந்த அளவு, 3.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது, உலக ஜிடிபி-யில் 4.2 சதவிகிதமாகும். ஸ்மார்ட்போன்களும், ஸ்மார்ட்போன் அக்ஸசரிஸ் மார்க்கெட் என்பது உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் காரணியாக உருவெடுத்துவருகிறது.Trending Articles

Sponsored