தஞ்சாவூரில் பாட்ஷா படம் ஓடுவதை மார்க் சக்கர்பெர்க்கிடம் சொன்னது யார்?Sponsoredவழக்கம் போல காலை எழுந்ததும் ஃபேஸ்புக்கில் கண் விழிக்கும் நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் ஆப்பில் சில மாற்றங்களை கவனித்தீர்களா? உங்களை ஆப்பில் புதிதாக வந்துள்ள அப்டேட் உங்களை ஆச்சர்யமளிப்பதோடு, சற்று அதிர்ச்சியும் அடைய வைக்கும் . காரணம் இந்த அப்டேட் உருவாக ஏதோ ஒருவகையில் நீங்களும் காரணமாக இருந்திருக்கிறீர்கள். இவையெல்லாம் மார்க் சக்கர்பெர்க்கின் உத்திகளில் ஒன்று தான்.

ஆம், ஃபேஸ்புக்கில் புதிதாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் கடைகள் எங்குள்ளன, உங்களுக்கு அருகில் உங்கள் நண்பர் யார் இருக்கிறார்கள், பொருட்களை வாங்கி விற்கும் குழுக்கள் எங்குள்ளன, நீங்கள் இருக்கும் பகுதிக்கான கைடு ஆகியவற்றை தந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் உணவகத்தை தேடும் போது நானும் எனது நண்பர்களும் வழக்கமாக அண்ணா சாலையில் செல்லும் உணவகத்தை பரிந்துரைக்கிறது. 

Sponsored


ஃபேஸ்புக்கிடம் இந்த விவரங்கள் எப்படி சென்றிருக்கும் என்று பார்த்தால், கொஞ்ச நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரது கணக்கில் ஃபேஸ்புக் எடிட்டர் மூலம் உங்கள் பகுதியில் இருக்கும் இந்த பெயர் கொண்ட இடம் என்ன என்ற கேள்வியை கேட்டு அது உணவகம் அதற்கு 5க்கு 4 ரேட்டிங் என்ற விவரங்களையெல்லாம் வாங்கி இருக்கிறது. 

Sponsored


இதைவிட அடுத்த விஷயம் தான் இன்னமும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டிஜிட்டலாக 22 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆன பாட்ஷா படத்திற்கு சென்றதும், இந்த படத்தை பார்க்க சென்றுள்ளோம் என ஸ்டேட்டஸ் தட்டியவருக்கு காத்திருந்தது அந்த ஆச்சர்யம். இந்த ஸ்டேட்டஸை போஸ்ட் செய்வதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு 10 கேள்விகளை முன் வைக்கிறது ஃபேஸ்புக். அதில் இது திரையரங்கமா? இதற்கு எவ்வளவு ரேட்டிங், நீங்கள் பார்க்கும் படத்துக்கான ரேட்டிங், இடம், உணவகம் என பல கேள்விகளை முன் வைத்து ஸ்டேட்டஸை பதிவிடுகிறது. மறுநாள் ஃபேஸ்புக்கில் பார்த்தால் அந்த நண்பர் கொடுத்துள்ள ரேட்டிங்கோடு இந்த படத்தையும், திரையரங்களையும் பரிந்துரை செய்கிறது ஃபேஸ்புக். தஞ்சாவூரில் பாட்ஷா படம் பார்க்கிறோம் என்ற தகவலை நாமே தான் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியுள்ளோம். இந்த விஷயத்தை வைத்து தான் நம் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வது துவங்கி வர்த்தகம் வரை எல்லா உத்திகளையும் மேற்கொள்கிறது ஃபேஸ்புக்.  

சென்னை அண்ணா சாலையில் உள்ள இடமும், தஞ்சாவூரில் உள்ள திரையரங்கின் பெயரும் எப்படி ஃபேஸ்புக்கிற்கு தெரிந்துள்ளது என்று பார்த்தால் அது தான் ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய உத்தியாக இருந்துள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருந்து உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும் அதில் நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டர் பக்கத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். இதில் நீங்கள் தன்னார்வத்துடன் இணைந்துள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டராக தேர்ந்தெடுக்கப்படுவதால் நீங்கள் ஃபேஸ்புக்கின் ஊழியராகவோ, ஏஜென்ட்டாகவோ, கான்ட்ரிப்யூட்டரோ கிடையாது. இதற்காக உங்களுக்கு எந்த வெகுமதியும் அளிப்படமாட்டாது. 

உங்களது ஃப்ரோஃபைலில் தெரியும் லீடர் போர்டில் உள்ள புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவீர்கள். இது நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தும் தரவரிசைப்படுத்தப்படும். தரவரிசைக்கான புள்ளிகள் நீங்கள் அளிக்கும் விவரத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

இப்படி தான் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பெற்றுள்ளது. நாமே முழுமனதுடன் இலவசமாக அளித்த இந்த டேட்டாக்கள் தான் இன்று ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டாக மாறியுள்ளது. நாம் அனைவரும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் ஃபேஸ்புக்கிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நாளை நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸுக்கு லைக் குறைவாக வருகிறது. இது போன்று ஸ்டேட்டஸ் போடுங்கள் என பரிந்துரை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஃபேஸ்புக் தன்னை மோனோபோலி எனப்படும் ஒற்றை ஆளுமையாக மாற்றி வருகிறது.

இந்த தகவல்களை கட்டாயம் ஃபேஸ்புக் வர்த்தகமாக்கும், 2 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் இந்த டேட்டாக்களை பெறுவது மிகவும் எளிதான விஷயம். உங்களது விருப்பங்களுக்கு ஏற்ப விஷயங்களை உங்களிடம் இருந்தே வாங்கி தருவது தான் மார்க் ஸ்டைல்... 

ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored