பெண்கள் தினத்தில் உலகமே கொண்டாடிய இந்தியப் பெண் யார் தெரியுமா?Sponsoredபெண் உரிமை, பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான சுதந்திரம் பிரச்னை என பல்வேறு சாதனைகளைக் கூறி உலகமே நேற்று பெண்களைக் கொண்டாடியது. ஆனால் நேற்று இணையதளத்தில் பெண்கள் தினம் எப்படியெல்லாம் ஹிட் அடித்தது தெரியுமா?

பெண்கள் தினம் பற்றிய தேடலில் 2004 முதல் நேற்று வரையிலான தேடல்களில் 2016-ம் ஆண்டு தேடல் தான் டாப் ட்ரெண்டிங். இந்த வருடம் அதனை கிட்டத்தட்ட மேட்ச் செய்யும் அளவுக்கு ட்ரெண்டானது 2017 பெண்கள் தினம்.

Sponsored


பெண்கள் தினத்தில் பெண்கள் தினம் பற்றி அதிகம் தேடப்பட்ட டாப் ஐந்து கேள்விகள் மிகவும் சுவாரஸ்யமானவை. 

Sponsored


1. When is International Women's Day?
2. What is International Women's Day?
3. How to celebrate International Women's Day?
4. Why do we celebrate Women's Day?
5. What is a good text for Women's Day?

இதில் சுவாரஸ்யமானதே ஏன் கொண்டாடுகிறோம் என்ற தேடலும், என்ன வாழ்த்துச் செய்தி அனுப்புவது என்ற தேடலும் தான். 

இணையத்தேடல்களில் கிட்டத்தட்ட உலகின் இணைய வசதி உள்ள எல்லா நாடுகளிலும் பெண்கள் தினம் தேடப்பட்டுள்ளது. இதில் முதலிடம் கொலம்பியாவுக்குத்தான். இந்தியா இந்த தேடல் தரவரிசையில் டாப் 25ல் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலக அளவில் இந்த வருடம் பாலின சமநிலை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது. 

உலகின் அதிகமாக தேடப்பட்ட பெண் தலைவர்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் ஆஞ்சலோ மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். அதிகம் தேடப்பட்ட பெண் சிஇஓ-க்களில் ஹிட் அடித்தது தான் இந்த ட்ரெண்டிங்கின் முக்கியமான விஷயம். உலகம் முழுவதும் எத்தனையோ பெண் சிஇஓக்கள் இருந்தாலும் முதலிடம் பிடித்தது இந்தியாவின் இந்திரா நூயி தான். அவரது செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அவரைப் பற்றிய விஷயங்களை அதிகமாக நேற்று உலகமே தேடியுள்ளது. 

நேற்றைய பெண்கள் தினத்தை இந்தியா குறைவாக தேடியிருந்தாலும், இந்தியப் பெண்ணை உலகமே தேடி ட்ரெண்டானது இந்திய பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகியுள்ளது.

- ச,ஸ்ரீராம்Trending Articles

Sponsored