லைக்ஸ், ரீட்வீட்ஸ், ஹேஷ்டேக்குக்கு நாம் ஏன் அடிமை ஆகிறோம்?!Sponsoredஎப்போதாவது நீங்கள் இணையத்துக்கோ, சமூக வலைதளங்களுக்கோ அடிமை ஆகிவிட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? சிக்னலில் நிற்கும் சில நொடிகளில்கூட, எத்தனை லைக்ஸ் என பார்க்கத் தோன்றியிருக்கிறதா? ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங் போல, காலியான மெயில் பாக்ஸை திறந்து திறந்து பார்த்திருக்கிறீர்களா? இன்ஸ்டா படத்தில் ரீச் அதிகம் இல்லையே என இன்னும் ரெண்டு ஹேஷ்டேக் சேர்த்திருக்கிறீர்களா? ட்விட்டரில் ரீட்வீட் எண்ணிக்கையைப் பார்த்தபடி இருக்கிறீர்களா? ஆன்லைன் ஷாப்பிங்கில் தேவையற்றதை வாங்கிக் குவித்திருக்கிறீர்களா? நிச்சயம் ஏதாவது ஒன்றைச் செய்திருப்போம். இப்படி நம்மை செய்யத் தூண்டுவது எது எனத் தெரியுமா? டோபோமைன்... எமகிராதகம்.

எலி ஒன்றைக் கூண்டில் அடைத்து, அதற்கு முன்னால் On-OFF சுவிட்ச் ஒன்று வைக்கப்பட்டது. எலி அந்த சுவிட்சைத் தொட்டு ஆன் பண்ணினால், அதன் மூளையில் டோபோமைன் என்ற வேதிப்பொருள் தூண்டப்படும். சுவிட்சைப் போடும்போது எல்லாம் அதற்கு டோபோமைன் உதவியால் உள்ளுக்குள் பேரானந்தம் உண்டாகும். ஒருகட்டத்தில், ஒவ்வொரு நாளும் விடாமல் அந்த டோபோமைன் பட்டனைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. விடாமல்... மணிக்கணக்கில் சோறு, தண்ணீர் இல்லாமல் எந்நேரமும் அது டொக்கு டொக்கு எனத் தட்டிக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், முழுமையாக அந்த பட்டனுக்கே அடிமையாகிவிட்டது. சமூக வலைதளங்களின் வழி நமக்குள் நடப்பது இது மாதிரியான ஒரு மாற்றம்தான்.

Sponsored


டோபோமைன் என்பது, நம்முடைய மூளையின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள். சிந்திப்பது, நகர்வது, தூங்குவது, ஊக்கம் அளிப்பது என மூளையின் பல செயல்பாடுகளுக்கு அவசியமான வினையூக்கி இந்த டோபோமைன். இந்த வேதிப்பொருள், உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது என்பதுதான் இதுவரை நம்முடைய புரிதலாக இருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் டோபோமைன் ‘தேடல் குணத்தை’ (Seeking Behaviour) உருவாக்கவல்லது எனக் கண்டறிந்துள்ளனர். இதன் தூண்டுதலால்தான், நாம் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்பட ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான பண்பாக இருக்கிறது. கற்றுக்கொள்வதிலும் பிழைத்திருப்பதிலும் இது அவசியமானது. ஆனால், இந்தத் தூண்டுதல் என்பது உடல் தேவைகளான உணவு மற்றும் செக்ஸ் என்பதைத் தாண்டி, நவீன யுகத்தில் தகவல்களைத் தேடுவதாக முன்னேறியுள்ளது. எவ்வளவு முடிகிறதோ, அவ்வளவு தகவல்களைக் கண்டடைவது என முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் தேடல் குணத்தை சமூக வலைத்தளங்கள் இலகுவாக்கிவிட்டன.

Sponsored


டோபோமைன், எப்போதும் ஒரே ஷாட்டில் அமைதியாவது இல்லை. அது எப்போதும் இன்னும் இன்னும் இன்னும்... என நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் கூகுளிலும் விக்கிபீடியாவிலும் ஃபேஸ்புக்கிலும் எதையாவது தேடப்போய் அல்லது பார்க்கப்போய் என்னென்னவோ தேடிப் படித்து லைக் பண்ணி மணிக்கணக்கில் மெய்மறந்து அந்த டோபோமைன் சுழலில் சிக்கிக்கொள்வது நேர்கிறது.

தேடல் மட்டும் அல்ல, எதிர்பார்ப்பு மூலமாகவும் டோபோமைன் தூண்டப்படுகிறது என்கிறார்கள்.  ஒரு பரிசு  கிடைப்பதைவிடவும் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும், அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸும் மூளையில் அதிக டோபோமைன் தூண்டுதலை ஏற்படுத்தக்கூடியது. இதை சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு நொடியும் நமக்கு அளிக்கின்றன. “இப்படி தொடர்ச்சியான டோபோமைன் தூண்டுதல்களுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒருகட்டத்தில் டோபோமைன் வேதிப்பொருள் தீரும்போதோ அல்லது குறையும்போதே நாம் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளார்ந்த தனிமைக்கும் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு'' என்கிறார் சூசன் வெய்ன்செங்க் என்கிற உளவியல் நிபுணர்.

சமூக வலைதள சுழலில் இருந்து மீள்வது கடினம்தான். ஆனால், முடியாத செயல் அல்ல. உங்களை நீங்களே சுயத்தேர்வு செய்து கொள்ளுங்கள். நினைத்த நேரத்தில் மொபைலில் இருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ள முடியுமா என பாருங்கள். அந்த சுயக்கட்டுப்பாடே நம்மை எதற்கும் அடிமையாக்காமல் காக்கும்.

- வால்டர் ஒயிட்Trending Articles

Sponsored