ஐஃபோன் யூசர்ஸ்... உங்க பேட்டரியைக் காப்பாத்தலாம் வாங்க..! #iPhoneTipsSponsoredஆப்பிள் ஐஃபோன் வாங்குவது கெத்துதான். ஆனால், அதை முறையாகப் பார்த்துக்கொள்வது அதைவிட கெத்து. யானை வாங்கிவிட்டு அங்குசம் வாங்காத மாதிரிதான் பலரும் ஆப்பிள் மொபைல் வாங்குகிறார்கள். ஐபோனுக்குத் தேவையான மற்ற ஆக்ஸசரிஸ் வாங்குவது உங்கள் இஷ்டம். ஆனால், அதன் பேட்டரியின் வாழ்நாளைச் சுருக்குவதும் நீட்டிப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. சுவிட்ச் போட்டா சார்ஜ் ஏறும். இதில் நம் வேலை என்ன என்கிறீர்களா? வாங்க.

100% சார்ஜ் பண்றீங்களா?

Sponsored


சார்ஜ் 90%க்குக் குறைந்தாலே கைகள் நடுங்கும் ஆளா நீங்க? அது ஒண்ணும் பத்தாம் வகுப்பு மார்க் இல்ல பாஸ். 90க்குக் குறைவானதும் பயப்படத் தேவையில்லை.எப்போதும் 100% சார்ஜ் வைத்திருப்பது நிச்சயம் சாதனையும் இல்லை. பேட்டரிக்கு நல்லதும் இல்லை. 30-80% தான் பேட்டரி தனது டாப் பெர்ஃபார்மென்ஸைக் காட்டும் என்கிறார்கள் எக்ஸ்பெர்ட்ஸ். நைட்டு ஃபுல்லா சார்ஜ் போடுறதைவிட, 20% ஆனதும் அரை மணி நேரம் சார்ஜ் போடுறது நல்லது. மதிய நேர குட்டித்தூக்கம்தானே நமக்கு செம பூஸ்ட் கொடுக்கும்!

Sponsored


Low battery வரவே கூடாது:

லித்தியம் பேட்டரிகளுக்கு Low battery என்றால் அலர்ஜி. ஒவ்வொரு முறையும் அப்படி 0% ஆன பிறகுதான் சார்ஜ் போடுவீங்கன்னா, சீக்கிரமே பேட்டரி மாத்த காசு ரெடி பண்ணிக்கோங்க. அதே சமயம், ஆப்பிள் ஆலோசகர்கள் என்ன சொல்றாங்கன்னா… ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ பேட்டரி முழுசா காலி ஆக அனுமதிக்கணுமாம். அப்பதான் பேட்டரி கேலிபிரேஷன் சரியாகுமாம். 

வெயில் வேண்டாம்

ஆப்பிள் மொபைலும், அதன் பேட்டரியும் ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ குடும்பம். நம்ம ஊரு வெயில் அவங்க உடம்புக்கு ஆகாது. அதனால் சூரிய ஒளி அதிகம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமோ அவசியம். அதனால்கூட பேட்டரியின் திறன் குறையலாம்.

கவர் போடலாம்…ஆனா…

ஆப்பிள் ஃபோன் கீழ விழுந்தா நம்ம மனசே உடஞ்சிடும். அதனால, அதுக்கு விதவிதமா கேஸ், கவர் போடுறது ஓக்கே. புல்லட் ப்ரூஃப்கூட போடுங்க. ஆனா சார்ஜ் போடுறப்ப அதையெல்லாம் கழட்டி வைங்க. சார்ஜ் ஏறும்போது ஹீட் அதிகமா வெளிப்படும். அப்ப கவர் இருந்தா அது பேட்டரிக்குத்தான் கஷ்டம். அதுக்காக, ஓடுற டிரெயின்ல ஓட்டை சுவிட்ச் பாக்ஸ் மேல வைச்சு சார்ஜ் போடுறப்ப கவரை எடுத்துடாதீங்க. 

டூப்ளிகேட் வேண்டாமே..!

ஆப்பிளின் ஒரிஜினல் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தவும். ஒரிஜினல் சார்ஜர்கள் 100% சார்ஜ் ஆனதும் தானாக ஆட்டோ கட் ஆஃப் ஆயிடும். ஆனால், லோக்கல் சார்ஜர்கள் அப்படி ஆகாது. கொஞ்சம் விலை அதிகம்தான். இருந்தாலும், மொபைலின் விலை அதைவிட அதிகம் ஆச்சே. அதனால, ஒரிஜினல் சார்ஜர்கள் மட்டுமே பயன்படுத்தவும்.

எல்லாம் சரியாதான் பண்றேன். ஆனாலும், சார்ஜ் ஏறுவதில் சிக்கல், ஏறிய சார்ஜ் புஸ்ஸுன்னு இறங்குது…இப்படி எந்த கம்ப்ளைண்ட் இருந்தாலும் உடனே ஆப்பிள் சர்வீஸ் செண்டருக்கு ஒரு விசிட் அடிச்சிடுங்க. ஏன்னா, முக்கால்வாசி நேரம், இந்த மாதிரி பிரச்னைகளுக்கு போனையே மாத்திக்கொடுக்கும் ஆப்பிள். ஆனா, எல்லாம் முடியட்டும்னு வெயிட் பண்ணா… வெயிட்டா ஒரு பில்லையும் கொடுக்கும் ஆப்பிள்.

மைண்ட் இட்.

-கார்க்கிபவாTrending Articles

Sponsored